ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் தான் இன்றைக்கு சோசியல் மீடியாவில் டிரெண்டாகிவருகிறது. குறிப்பிட்ட வினாடிக்குள் புகைப்படத்திற்குள் மறைந்திருக்கும் விஷயங்களை நீங்கள் எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்? உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது? என்பதை வைத்து உங்களின் மூளையின் செயல்திறனைக் கண்டறிய முடியும். பொதுவாக உடல், உடலியல் மற்றும் அறிவாற்றல மாயைகள் போன்ற பல்வேறு வகையான ஒளியியல் மாயைகள் உள்ளன.. இதன் மூலம் ஒவ்வொரு மனித மூளை, ஒரு விஷயத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமாக பார்ப்பார்கள் என்கிறது ஆராய்ச்சிகள்.
ஐக்யு திறனைச்சோதிக்கும் புதிர்:
இன்றைக்கு நமக்கு முன்னால் இருக்கும் புகைப்படத்தில் தான் புதிர்விளையாட்டு ஒளிந்துள்ளது. ஒரு தந்திரமான புதிராகவும் இது உள்ளது. கடலுக்கு அடியில் பல ஆக்டோபஸ்களை நாம் முதலில் காணலாம். பொற்காசுகள் நிரம்பி வழியும் ஒரு புதையல் பெட்டிக்கு அடுத்துள்ள கடல் படுகையில் ஆக்டோபஸ்கள் அதிகளவில் உள்ளது. இதற்குள் தான் ஒரு மீன் ஒளிந்துக்கொண்டிருக்கிறது. இதை நீங்கள் 13 வினாடிக்குள் கண்டுபிடித்துவிடுகிறீர்கள் என்றால் உங்களது மூளையின் செயல்திறன் திறம்பட செயல்படுகிறது என அர்த்தம்.. நீங்களும் உங்களின் மூளையின் செயல்திறனைச் சோதிக்க ரெடியாகிவிட்டீர்களா? இல்லையென்றால் இப்ப ஆரம்பிச்சிடுங்க..
Read More : எண்கள் வரிசையின் லாஜிக் புரிந்து அடுத்த எண்ணை சொல்லுங்க பார்ப்போம்!
ஆரம்பத்தில், இந்த ஒளியியல் மாயைப் புகைப்படத்தைப் பார்க்கும் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தலைச் சொறிய ஆரம்பித்துவிட்டனர். கண்டுபிடிப்பதற்கு மிகுந்த சிரமத்தைச் சந்தித்தனர். ஒரு சிலர் மட்டும் தான், குறிப்பிட்ட வினாடிக்குள் கண்டுபிடித்து அவர்களின் மூளையின் செயல்திறன் எந்தளவிற்கு உள்ளது என அறிந்துக்கொண்டனர்.. என்ன நீங்களும் கண்டுபிடிச்சாச்சா? இல்லையா? இல்லையென்றால் படத்தை மீண்டும் நன்றாக உற்றுப்பாருங்கள்.. நீங்களும் சுலபமாக கண்டறிந்துவிடலாம்.
மறைந்திருக்கும் மீனை 13 வினாடிகளில் கண்டுபிடித்தீர்களா?
முதலில் படத்தை நன்றாக உற்றுப்பார்க்கவும். பின்னர் ஆக்டோபஸ்களில் மறைந்திருக்கும் மீன்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.
டிப்ஸ் 1- நீங்கள் பார்க்கும் புகைப்படத்தில் உள்ள மீன்கள் ஆக்டோபஸ்களின் நிறத்தில் மறைந்திருக்கிறது. இது தான் நீங்கள் கண்டுபிடிப்பதற்கு மிகவும் தந்திரமானதாக அமைந்திருக்கும்.. இப்பவாவது கண்டுபிடிச்சாச்சா? இல்லைன்னா… இதோ அடுத்த டிப்ஸ் உங்களுக்காக.
டிப்ஸ் 2: உங்களுக்கு முன்னால் இருக்கும் புகைப்படத்தில் மேல் வலது பக்கத்தை நன்றாக உற்றுப்பார்க்கவும். சிறிய ஊதா நிற மீன் ஒன்று ஆக்டோபஸின் பின்னால் இருந்து எட்டிப்பார்ப்பது போன்று நமக்குத் தெரியவரும்.
இப்பொழுது நிச்சயம் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு எவரின் உதவியும் இல்லாமல் நீங்களே குறிப்பிட்ட வினாடிகளுக்குள் கண்டுபிடித்திருந்தால்.. உங்களின் ஐக்யு அளவை மிகச்சிறந்ததாக இருக்கிறது என அர்த்தம். இனி நீங்களும் இதுப்போன்ற ஒளியியல் மாயைப் புகைப்படங்களைக் கண்டறிந்து உங்களின் அறிவுத்திறனைச் சோதித்துக் கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion, Trending