மூளை மற்றும் கண்களுக்கு வேலை கொடுக்க கூடிய பல விஷயங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. இவற்றில் முக்கியமானவை ஆப்டிகல் இல்யூஷன்கள் மற்றும் பிரெயின் டீஸர்கள். சில ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்போதும் தோன்றுவதை அப்படியே காட்டாது.
உண்மையில் ஆப்டிகல் இல்யூஷன்ஸ் நம் மூளையை ஏமாற்றி நம்முடைய யதார்த்த உணர்வை கேள்விக்குள்ளாக்குகிறது. சில ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் புதிர்களை கண்டறிய கண்களையும், மூளையையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டி இருக்கலாம். எனவே உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் மற்றும் புத்திசாலித்தனமாக கழிக்க விரும்பினால் நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை கண்டறிவதில் நேரம் செலவழிக்கலாம்.
தவிர ஆப்டிகல் இல்யூஷனுக்கான விடைகளை கண்டுபிடிப்பது நம்முடைய கவனிக்கும் திறன்களை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் ஹிடன் இமேஜஸ் முதல் இம்பாஸிபில் ஷேப்ஸ் வரை பல வடிவங்களில் வருகின்றன. மிகவும் குழப்பமான ஒரு ஆப்டிகல் இல்யூஷனை தான் இங்கே நாம் பார்க்க போகிறோம். இப்போது நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த இல்யூஷன் இமேஜில் உள்ள இருவரும் படிக்கட்டுகளில் ஏறுகிறார்களா அல்லது கீழே இறங்குகிறார்களா என்பதைக் கண்டறிய சவால் விடுகிறது. அதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா..?
மிகவும் சவாலான ஆப்டிகல் இல்யூஷன் தான் இது. இருந்தும் இதற்கான விடையை கண்டறியும் முயற்சியை மேற்கொள்ளலாம் வாருங்கள். படத்தில் உள்ள ஆண்கள் நடக்கும் போது ஒருவருக்கொருவர் கண்களை பார்த்து கொள்வது போல் தெரிகிறது என்றாலும் அவர்கள் நகரும் திசை இந்த இமேஜில் அவ்வளவு தெளிவாக இல்லை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர் பெரும்பாலான மக்களை குழப்பமடைய செய்த, அதே நேரத்தில் சில யூஸர்கள் விரைவாக பதிலை கண்டறிந்துள்ளனர்.
இந்த இமேஜில் இடதுபுறம் உள்ள நபர் கீழே நடந்து செல்கிறார். அந்த நபர் சாய்ந்த தோரணையில் (leaning posture) நடப்பதன் மூலம் இதனை கண்டுபிடிக்கலாம். இதற்கிடையில் வலதுபுறம் உள்ள நபர் படியில் மேல் நோக்கி மேலே நடந்து செல்கிறார். இதற்கான க்ளூ அவருடைய குறுகிய படிகளில் (narrow steps) உள்ளது. மேலும், வலதுபுறத்தில் இருக்கும் நபரின் பொசிஷன் அவர் எந்த திசையில் செல்கிறார் என்பதை தெளிவாக குறிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion