அமெரிக்காவைச் சேர்ந்தவர் டோரி போவி. 32 வயதான இவர் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனையாவார். கடந்த 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கங்களை வென்றுள்ளார். அதோடு 2017 ஆம் ஆண்டு இவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியனாக முடி சூட்டப்பட்டார். புளோரிடாவில் வசித்து வரும் இவர் நேற்று காலை உயிரிழந்தார். டோரியின் வீட்டில் அவர் பிணமாக கிடந்துள்ளதாகவும், அவர் மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
டோரியின் மரணத்தை அவருக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. ஒரு நல்ல தோழியை, மகளை, சகோதரியை நாங்கள் இழந்திருக்கிறோம் என அந்த நிறுவனம் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இது மனதை கணக்கச் செய்யும் நிகழ்வு என பலரும் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளனர். தடகள விளையாட்டில் டோரி போவி ஒரு மிகச் சிறந்த எதிர்காலத்தை கொண்டிருந்ததாகவும், இப்போது அந்தக் கனவு சிதைந்துள்ளது என்றும் அவரது பயிற்சி நிறுவனம் கூறியுள்ளது.
ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளில் டோரி போவி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மிசிசிபி மாகாணத்தை சேர்ந்தவரான இவர் அமெரிக்காவிற்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடி, வென்று அமெரிக்காவிற்கு பெருமை சேர்ந்துள்ளார். பல்கலைகழகத்தில் படிக்கும் போதில் இருந்தே தடகள போட்டிகளில் விளைாயடி வந்துள்ளார். இவர் திடீரென மரணம் அடைந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : பாலத்தைக் கடக்கும் ரயிலின் காலத்தைப் பொறுத்து பாலத்தின் நீளத்தை சொல்ல முடியுமா?
டோரியின் மரணத்திற்கு உலக தடகள சம்மேளனமும் இரங்கல் தெரிவித்துள்ளது. அர்ப்பணிப்புடன் தடகளப் போட்டிகளில் கோலோச்சி வந்த டோரியி் மரணம் அதிர்ச்சியளிப்பதாக ட்விட்டரில் பதவிடப்பட்டுள்ளது. டோரி போவியின் மரணத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் தடகள் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.