கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. அந்நாட்டின் அதிபராக கிம் ஜோங் உன் பதவியில் இருக்கிறார். தனது அதிரடியான நடவடிக்கைகளால் உலக நாடுகளின் பேசு பொருளாக அவ்வப்போது மாறிவிடுவார் கிம். அவரைப்பற்றியும், வடகொரியாவைப் பற்றியும் யாரும் அவ்வளவு எளிதாக எதையும் அறிந்து கொள்ள முடியாது. அந்த அளவிற்கு அங்கு கட்டுப்பாடுகள் அதிகம்.
ராணுவ ரீதியாக தன்னை மிகவும் பலமுள்ள நாடாக காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது வடகொரியா ஏவுகனை சோதனை நடத்துவது வழக்கம். இதனால் உலக நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவின் கண்டனத்திற்கு அடிக்கடி ஆளாகி வருகிறார் கிம் ஜோங் உன். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கிம் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. தன் தந்தையின் நினைவு தினத்தன்று நாட்டு மக்கள் யாரும் சிரிக்க கூடாது என்று சட்டம் போட்டவர் கிம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இங்கு சிறு குற்றங்களுக்கு கூட அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. அதுபோல தன்னை எதிர்ப்பவர்கள் மற்றும் அரசுக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. வெளியுலகம் பற்றி வடகொரியாவில் இருக்கும் மக்கள் தெரிந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு சினிமா படங்கள், நாடகங்கள் உள்ளிட்ட எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் கிடையாது.
வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதை போல சி.டி. கேசட்களை கடத்தி தான் பார்க்க வேண்டும். அதுவும் வெளியே தெரிந்தால் தேசத்துரோக குற்றமாக கருதப்பட்டு அதற்கும் மரண தண்டனை வரை வழங்கப்படும். அதுபோல அந்த நாட்டை குறித்த எந்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை.
குறிப்பாக அங்கு பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்த அனுமதி கிடையாது. அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளுக்கு மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி உள்ளது. அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது அவர்கள் இணையத்தில் என்ன தேடுகிறார்கள் என்பதை கண்காணிக்க தனியே ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அனுப்பும்.
அந்த வகையில் அண்மையில் அதிபருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் அவரை பற்றிய தகவல்களை உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இணையத்தில் தேடியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கடும் கோபம் அடைந்த அதிபர் கிம் ஜோங் உன், அவருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இணையத்தில் தன்னைப் பற்றிய விபரங்களை தேடியதற்காக நாட்டின் உயர் பதவியில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கே மரண தண்டனை வழங்கி இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kim jong un, Trending, Viral