கின்னஸ் சாதனையில் பலவிதம் உண்டு. சில சாதனைகள் மிகவும் கடினமானதாகவும் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடியதாகவும் இருக்கும். சிலர் செய்யும் கின்னஸ் சாதனைகள் பார்ப்பதற்கு மிகவும் எளிதாகவும் அதேசமயம் அனைவருக்கும் கை வராத ஒன்றாகவும் இருக்கும். அந்த வகையில் ஒரு வினோதமான சாதனையை பெண் ஒருவர் புரிந்துள்ளார்.
நியூ மெக்சிகோவை சேர்ந்த லைப்ரேரியனான கெல்சி க்ரப் என்ற பெண்மணி ஒருவர் மிகவும் வித்தியாசமான கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். தனது கால் பாதங்களை மிகவும் அசாதாரணமாக வகையில் எதிர் எதிர் திசைகளில் சுழற்சி நிறுத்தி இந்த புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
தற்போது கின்னஸ் உலக சாதனையை செய்துள்ள கெல்சி, தனது கால் பாதங்களை கிட்டத்தட்ட 171.4 டிகிரி கோணங்களில் எதிர் எதிர் திசைகளின் நிறுத்தி உலகின் மிகப்பெரிய கால் பாதங்களை சுழற்சியவர் என்பதற்கான பெருமையை பெற்றுள்ளார். அவர் இந்த சாதனையை செய்வதற்கு முடிவெடுத்த கதையே மிகவும் சுவாரசியமானது.
Kelsey Grubb has the incredible fortune of being able to turn her feet almost 180 degrees...https://t.co/qy9FNIRC5m
— Guinness World Records (@GWR) May 2, 2023
கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய கின்னஸ் உலக சாதனை புத்தகம் ஆனது வெளிவந்த காலகட்டத்தில் அவருடன் பணி புரியும் மற்றொருவர் அதன் பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கையில் வித்தியாசமான பாதங்களை சுழற்சி உலக சாதனை செய்ததை பற்றி அவர் பார்த்திருக்கிறார். மேலும் அந்த சாதனையை பார்த்த கெல்சியும் தன்னால் இதனை முறியடிக்க முடியும் என மிகவும் உறுதியாக கூறி இருக்கிறார்.
32 வயது நிரம்பிய கெல்சி உடனடியாக ஒரு பேப்பரின் மீது நின்று தன்னுடைய திறனை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளார். கின்னஸ் உலக சாதனை என்று வரும்போது எவ்வாறு அளவிடுகளை செய்வார்கள் என்று தெரியாத போதிலும், தன்னால் எந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட முடிகிறது என்பதை சோதிப்பதற்காகவே அவர் இதனை செய்துள்ளார்.
கிட்டத்தட்ட எந்தவித பயிற்சியும் இல்லாமலேயே நேரடியாக உலக சாதனை முறியடிக்கும் அளவிற்கு அவருடைய கால் பாதங்களை அவரால் சுழற்சி முடிந்திருக்கிறது. சிறுவயதில் அதிகம் ஸ்கேட்டிங் செய்யும் தன்னுடைய பழக்கத்தால் இயற்கையாகவே இந்த தன்மை தனது கால்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
மேலும் தன்னுடைய இந்த திறனைப் பற்றி கெல்சி மிகவும் ஆச்சரியமாக கூறுகிறார். உண்மையில் சராசரியான ஒரு மனிதனால் தன்னுடைய கால் பாதங்களை 90 டிகிரிகள் வரை மட்டுமே சுழற்சி முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி தெரியாத கெல்சி தன்னுடைய இந்த திறன் ஆனது எவ்வளவு அசாதாரணமானது என்பதை பற்றி தனக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் இவ்வாறு செய்யும்போது எந்தவித வலியையும் தான் உணரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Also Read : கோல்டு கலந்த டீ...இந்தியாவில் எங்கு கிடைக்கிறது தெரியுமா?
முதன்முதலில் தான் இப்படி ஒரு சாதனையை செய்யப் போவதாக அவர் மற்றவர்களுக்கு அறிவித்த நிலையில், அனைவரும் உடனடியாக தங்களுக்கு அதனை செய்து காண்பிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த சமயத்தில் பெரும்பாலானோர் கெல்சியால் சாதனை புரிவதற்காக ஊக்குவித்துள்ளனர்.
தன்னுடைய கின்னஸ் உலக சாதனையை பற்றிய அவர் கூறுகையில், இதற்காக நான் எந்தவித சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டதில்லை. இந்த உலக சாதனையை செய்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், தன்னாலும் ஏதோ ஒன்று செய்ய முடிகிறது என்பதை பற்றி மிகவும் பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.