முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஒரே முக ஜாடை.. 550 குழந்தைகளுக்கு அப்பா.. ஆச்சரியத்தில் உறைந்த நீதிமன்றம்.!

ஒரே முக ஜாடை.. 550 குழந்தைகளுக்கு அப்பா.. ஆச்சரியத்தில் உறைந்த நீதிமன்றம்.!

ஜோனாத்தன்

ஜோனாத்தன்

சட்டத்தை ஏமாற்றி 550 குழந்தைகளுக்கு அப்பாவான நபரால் நீதிமன்றம் அதிர்ச்சியடைந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிலர் பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதற்காக அவர்கள் செய்யும் வேலை முறையானதுதானா? சமூகத்துக்கு ஏற்றதா என எது குறித்தும் கவலைப்படுவதில்லை. சிலர் பணம் சம்பாதிக்க தவறான வழியைத் தேர்ந்தெடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.

இதே போன்று நெதர்லாந்தை சேர்ந்த தனது விந்தணுவை தானம் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். ஜோனாதன் மெய்ஜெர் என்ற 41வயது நபர். இவர் நெதர்லாந்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் விந்தணுவை தானம் செய்து பணம் சம்பாதித்து வந்திருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட 550 முறை இவர் தனது விந்தணுவை தியானம் செய்திருக்கிறார். அதாவது மறைமுகமாக இவர் 550 குழந்தைகளுக்கு அப்பாவாகியிருக்கிறார்.

இதையும் படிக்க | 27 நாட்களில் 64 கிமீ தூரம்.... உணவில்லாமல் பழைய ஓனரை தேடிச்சென்ற நாய் - நெகிழ்ச்சி சம்பவம்

ஜோனாதன் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. நெதர்லாந்து சட்டப்படி ஒருவர் 12 பெண்கள் மூலம் 25 குழந்தைகளுக்கு மட்டுமே அப்பாவாகலாம். ஜோனாதன் இந்த விதியை மீறியிருக்கிறார். நெதர்லாந்து மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் விந்தணுவை தானம் செய்திருக்கிறார். டச்சு மற்றும் டேனிஸ் மருத்துவமனைகளிலும் விந்தணு தானம் செய்திருக்கிறார்.

அவர் மீதான விசாரணையில் ஏற்கனவே பலமுறை விந்தணு தானம் செய்ததை ஜோனத்தன் மறைத்திருக்கிறார் என்பதும் ஜோனாதன் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டே எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் அவர் 102 குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்திருக்கிறார்.

top videos

    ஜோனாதனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அவர் குழந்தையில்லாத பெற்றோருக்கு உதவும் நோக்கிலேயே இவ்வாறு செய்தததாக வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஜோனாத்தன் விந்தணு தானம் செய்ய தடை விதித்ததுடன் இனி விந்தணு தானம் செய்தால் அந்த நாட்டின் மதிப்பில் 90 லட்சம் அபராதம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    First published:

    Tags: Netherlands, Sperm