முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஏப்ரல் 5 : ஆழி வேந்தர்களை கொண்டாடும் தேசிய கடல்சார் தினம் இன்று!

ஏப்ரல் 5 : ஆழி வேந்தர்களை கொண்டாடும் தேசிய கடல்சார் தினம் இன்று!

கடல்சார் தினம்

கடல்சார் தினம்

தேசிய கடல்சார் தினம் 1919 ஆம் ஆண்டு மும்பையிலிருந்து லண்டனுக்கு சிந்தியா ஸ்டீம் நேவிகேஷனின் முதல் பயணத்தை குறிக்கிறது.

  • Last Updated :
  • Chennai, India

கிழக்கே வங்கக்கடல், தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிகடலென்று மூன்று பக்கமும் கடல் பகுதியை கொண்ட தீபகற்ப (peninsular) நாடு தான் இந்தியா. ஐரோப்பியர்கள் எல்லாம் கப்பல் கட்டும் காலத்திற்கு முன்னரே கடல் தாண்டி நாடுகளை கைப்பற்றிய "கடாரம் கொண்டான்" ராஜேந்திர சோழன் வாழ்ந்த நாட்டில் கடல்சார் தினம் இல்லாமல் எப்படி?

வரலாறு தொடங்கிய காலம் முதல் இன்று வரை இந்திய பெருங்கடலின் முக்கிய ஆளுமையாக இந்தியா தான் இருந்து வருகிறது. அதனால் அதன் கடல் சார் வணிகத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 அன்று தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 அன்று தொடங்கும் தேசிய கடல் வாரத்தின் கடைசி நாளில் தேசிய கடல்சார் தினம் (national maritime day )அனுசரிக்கப்படுகிறது. இது இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டாடுகிறது. 2023 ஆண்டு கொண்டாட்டம் என்பது கடல் சார் தினம் தொடங்கிய 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

தேசிய கடல்சார் தினம் 2023: தீம்

இந்த ஆண்டுக்கான தேசிய கடல்சார் தினத்தின் தீம் 'கப்பலில் அம்ரித் கால்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விடுதலைக்கு பிறகான  கடல் சார் வணிகத்தின் பொன்விழாவைக் குறிப்பிடுகிறது. இது இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த காலத்தில் வருவதால், 75-100 ஆண்டுகள் வரையான காலத்தை குறிக்கும் அம்ரித் கால் என்ற வார்த்தையால் அழைக்கப்படுகிறது.

வரலாறு:

பிரிட்டிஷ் மற்றும் முகலாயர் ஆட்சிக்கு முன்பு, இந்தியா ஒரு முக்கிய கடற்படை நாடாக இருந்தது. ரிக் வேதங்கள் இந்திய கப்பல்கள் மற்றும் மேற்கு ஆசியாவுடன் எவ்வாறு வர்த்தகம் நடத்தப்பட்டது என்று குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்கள் கிழக்கு ஆசிய பகுதி, ரோமானிய நாடு வணிகம் குறித்து கூறுகிறது. கங்காரிடைப் பேரரசு, சோழப் பேரரசு மற்றும் மௌரியப் பேரரசு ஆகியவை பண்டைய இந்தியாவில் சக்திவாய்ந்த கடல்சார் நாகரிகங்களாக இருந்தன.

ஆனால் ஆங்கிலேயர்கள் வந்த பின்னர் இது முற்றிலும் ஒடுக்கப்பட்டது. இந்தியர்கள் தனியாக கப்பல் விட தடை விதிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் 1912 இல் வ.உ.சி நீராவி கப்பலை விட்டார். ஆனால் தேசிய கடல்சார் தினம் 1919 ஆம் ஆண்டு மும்பையிலிருந்து லண்டனுக்கு சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கோ. லிமிடெட் இன் முதல் இந்திய ஸ்டீம்ஷிப் "எஸ்எஸ் லாயல்டி" யின் முதல் பயணத்தை நினைவாக அனுசரிக்கப்படுகிறது.  இது இந்தியாவின் இரண்டாவது பழமையான கப்பல் நிறுவனமாகும் மற்றும் குவாலியரின் சிந்தியா வம்சத்திற்கு சொந்தமானது.

கடல் வழிகள் ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்தப்பட்டபோது இந்தியாவின் கப்பல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான படியாகும். அதன் பின்னர் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி முதன்முறையாக இந்த நாளில்  உலகெங்கிலும் உள்ள கண்டங்களுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு தெரிவிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்பட்டது.

குஜராத்தின் லோதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலர் கப்பல்துறை, கிமு 2400 க்கு முந்தையது, இது உலகிலேயே மிகவும் பழமையானது என்று நம்பப்படுகிறது. பின்னர், சத்ரபதி சிவாஜி தலைமையிலான மராட்டியர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்களையும் போர்த்துகீசியர்களையும் எதிர்த்து ஒரு வலிமையான கடல் படையாக மாறினார்கள்.

இதையும் பாருங்க: ” சாலையை கடக்கும்போதும் செல்போன்... அப்புறம் கார் ஏறிடுது..! ” - மொபைல்போன் உருவாக்கிய பொறியாளர் கவலை..!

முக்கியத்துவம்

இந்தியாவின் வளமான கடல்சார் வரலாறு மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை ஆதரிப்பதில் தற்போதைய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தேசிய கடல்சார் தினம் முக்கியமானது. தங்கள் குடும்பங்களை விட்டு விலகி கடலில் பல மாதங்கள் கழிக்கும் மாலுமிகளுக்கு நன்றி தெரிவிக்க இந்த தினம் முக்கியத்துவம் பெற்றது.

கொண்டாட்டங்கள்:

கடல்சார் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சிறப்புமிக்க நபர்களுக்கு விருது வழங்கி இந்திய அரசு தேசிய கடல்சார் தினத்தை கொண்டாடுகிறது. அரசு கடலில் உயிர் தியாகம் செய்த மாலுமிகளுக்கும் அஞ்சலி செலுத்துகிறது.

First published:

Tags: Bay of Bengal, Indian Navy