விண்கல்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் போன்றவற்றால் பூமிக்கு ஆபத்து என எச்சரிக்கைகளை அவ்வப்போது விண்வெளி ஆய்வு மையங்கள் தந்து மக்களை பீதிக்குள் ஆழ்த்தும். அத்தகைய புது எச்சரிக்கை ஒன்றை நாசா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூமியை நெருங்கும் கோள்கள் உள்ளிட்ட பொருள்களை நாசா தொடர்ந்து கண்காணித்து வரும். அதன்படி சமீபத்தில், 650 அடி அகலமுள்ள சிறுகோள் பூமிக்கு அருகில் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாசா விண்வெளி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாசா இந்த சிறுகோளுக்கு 2023 CL3 என்று பெயரிட்டு, பூமியின் நெருங்கும் கோள்கள் பட்டியலின் கீழ் வைத்துள்ளது. இத்தகைய அளவுள்ள ஒரு சிறுகோள் பூமியில் மோதினால் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று நாசா கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இது வரும் மே 24 அன்று பூமிக்கு வெகு அருகாமையில் அதாவது 72 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்ப்பதற்கு, இந்த தூரம் அதிகமாகக் கருதப்பட்டாலும், இந்த கோள் மணிக்கு 25,000 கிமீ வேகத்தில் பயணிப்பதால், அது தனது திசையை மாற்றி பூமிக்கு அருகில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாசா நம்புகிறது.
தற்போதைய சூழலில் மனிதர்கள் இது குறித்து கவலைபட தேவையில்லை என நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிவேகமாகப் பயணிக்கும் இவ்வளவு பெரிய கோளை சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ளகூடாது என நாசா கவனத்துடன் உள்ளது.இதன் காரணமாக, இதுபோன்ற சிறுகோள்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாசா பாதுகாப்பு நெறிமுறையை உருவாக்கி வருகிறது.
கடந்த ஆண்டு, அவர்கள் இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனை பணியை மேற்கொள்ள தொடங்கினர். டிமார்போஸ் எனப்படும் சிறுகோளின் சுற்றுப்பாதையைக் கண்டறிய இது உதவியது. இருப்பினும் நாசா முழுமையாக தயாராகவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: Video | பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழாவில் தெரிந்த மர்ம உருவம்? திகிலை கிளப்பிய வீடியோ... உண்மை என்ன?
சமீபத்தில் எலான் மஸ்க் கூட அத்தகைய கருத்தை ட்விட்டரில் தெரிவித்து தனது கவலையை பகிரந்துள்ளார். ஒரு நாள் நிச்சயம் பூமியை ஒரு பெரும் பாறை மோதும். அதில் இருந்து நம்மை காக்க தற்போதைய சூழலில் எந்த பாதுகாப்பு முறையும் இல்லை என்றுள்ளார்.
சமீபத்தில், 45-110 அடி வரை இருக்கும் 2023 HG1 என பெயரிடப்பட்ட ஒரு சிறுகோள் , மே 9 அன்று 7200 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி பாயும் என்ற அபாய எச்சரிக்கை நாசாவால் வெளியிடப்பட்டது. இருப்பினும், அது 4.16 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பயணித்து எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NASA