இணையத்தின் ஆதிக்கத்தில் பயணித்துவரும் நாம், ஒவ்வொரு நாளும் புதிய புதிய விஷயங்களை அறிந்துக் கொள்கிறோம். குழந்தைகளின் சேட்டைகள் முதல் ஆண்கள் மற்றும் பெண்களின் அசாத்திய திறமைகள் என பலவற்றை சோசியல் மீடியாவின் வாயிலாகத் தான் பார்க்கிறோம். இதில் சில வீடியோக்கள் நம்மை யோசிக்க வைப்பதோடு நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்படி ஒரு வீடியோவைத் தான் சமீபத்தில் நாகலாந்து சுற்றுலா மற்றும் உயர்கல்வி அமைச்சர் டெம்ஜென் இம்னோ அலோங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சுழற்றியடிக்கும் புயலால் மக்கள் தங்களையும், தங்களது தெருவோரக்கடைகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காக அதை மூடும் பணிகளில் ஈடுபடுவது போன்று வீடியோ அமைகிறது. “ ஒரு பெண் மழையிலிருந்து தப்பிக்க கடையை மூடுவதற்காக, தார்ப்பாயை இழுத்து செல்கிறார். ஆனால் அவரால் அந்த புயல் காற்றினால் செய்ய முடியவில்லை. இருந்தப்போதும் பெரும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அப்போது இதைப்பார்த்துக் கொண்டிருந்த, அப்பெண்ணின் குழந்தை, தன்னுடைய தாய்க்கு உதவ முயற்சிக்கிறார்“. தார்ப்பாயை மூடுவதற்கு முயற்சித்தும் அவரால் முடியவில்லை.இருந்தப்போதும் தன்னுடைய உதவியை தன்னுடைய தாய்க்கு செய்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் அச்சிறுவன். உடனே காற்றுக்கு அடித்துச் செல்லப்பட்ட சேரை எடுத்து தன்னுடைய அம்மாவிடம் கொடுப்பது போன்று வீடியோ முடிவடைகிறது. தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள இந்த வீடியோ 31 வினாடிகள் தான் என்றாலும் நெட்டிசன்களின் இதயத்தைக் கவர்ந்துள்ளது.
Read More : ”பிரச்னை வரும்போது இதை பண்ணுங்க..” - பில்கேட்ஸ் வழங்கிய பொன்னான அறிவுரை..!
இதுவரை சுமார் 3.92 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். இதோடு பல்வேறு கருத்துக்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக “பொறுப்பைப் புரிந்துக் கொள்வதற்கு வயது முக்கியம் இல்லை என்றும், சூழ்நிலைத் தான் இவர்களுக்கு அனைத்தும் கற்றுக்கொடுக்கின்றன என பயனர் ஒருவர் டிவிட் செய்துள்ளார்.
जिम्मेदारी समझने के लिए उम्र कि जरूरत नहीं, हालात ही सीखा देता हैं! pic.twitter.com/VdGu5saDS8
— Temjen Imna Along (@AlongImna) May 18, 2023
மற்றொரு பயனர் ஒருவர், அருமையான பதிவு என்றும் பொறுப்பு மட்டுமே ஒரு மனிதனைப் பெரிதாக்குகிறது என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த குழந்தை எந்தளவிற்கு இனிமையாகவும், புத்திசாலித்தனமாகவும் உள்ளது என்றும் நிச்சயம் இவருக்கு கடவுள் ஆசிர்வதிப்பார் என்று நெட்டிசன்கள் டிவிட் செய்துள்ளனர். பள்ளிகளில் கற்பிக்கப்படாத பாடங்களை ஒவ்வொரு நாளும் நடைமுறை வாழ்க்கை கற்பிக்கிறது என அச்சிறுவனை நெட்டிசன்கள் புகழ்ந்துள்ளனர்.
பொதுவாக நாகலாந்து சுற்றுலா மற்றும் உயர்கல்வி அமைச்சர் டெம்ஜென் இம்னோ அலோங், சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் டெம்ஜென் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெறும். சமீபத்தில் கூட, நாகலாந்தின் தலைநகர் கோஹிமாவில் இருந்து 53 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஜபாமி என்ற அழகிய கிராமத்தைப் பற்றிய ஒரு சிறிய கிளிப்பை அலோங் பகிர்ந்துள்ளார். இந்தக் கிளிப்பைப் பகிரும்போது, "நம்மை இந்த செழுமையான இயற்கை சூழல் மற்றும் கலாச்சாரத்திற்கு இடையே நம்மை இழுந்து செல்வது போன்று அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.