பயணம் என்று சொன்னாலே, புத்துணர்ச்சி தரும். பயணம் செல்வது, வெவ்வேறு இடங்களுக்கு பயணிப்பது என்பது நமக்கு பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கும்.
சமீப காலமாக உலகம் முழுவதிலுமே வெவ்வேறு இடங்களுக்கு நீண்ட தூர பைக் பயணம் என்பது மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் பலரும் பைக் பயணத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு, முறையான பயிற்சி பெற்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் ஒருவர்தான் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த யோகேஷ். இவர் மும்பையில் இருந்து லண்டனுக்கு பைக்கில் சென்றிருக்கிறார்.
பைக் பிரியர்கள், சாகசர்கள் உள்நாட்டிலேயே பயணம் மேற்கொண்டு சாதனைகள் புரிந்து வருகிறார்கள். இந்நிலையில் நாடு விட்டு மற்றொரு நாட்டுக்கு பைக்கிலேயே செல்லும் சாகசங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த யோகேஷ் அலேகரி என்ற ஒரு பைக்கர் மும்பையில் இருந்து லண்டனுக்கு பைக்கிலேயே செல்லவிருக்கிறார். கேட்கும்போதே சிலிர்க்க வைக்கும், ஆச்சர்யப்பட வைக்கும் இந்த பயணத்தை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Read More : தடை.. அதை உடை! உலகின் வேகமான பெண்ணை கொண்டாடும் கூகுள் டூடுல்!
யோகேஷ், முறையான பயிற்சி பெற்ற ஒரு ப்ரொபெஷனல் பைக்கர். இவர் கடந்த 6-7 ஆண்டுகளாக பலவிதமான பைக் சாகசங்களை மற்றும் திரிலிங்கான பயணங்களை மேற்கொண்டு வந்துள்ளார். அதற்கு மகுடம் வைத்தது போல மும்பையில் இருந்து லண்டனுக்கு இவர் பைக்கில் பயணம் செய்யவிருக்கிறார். ஏற்கனவே மகாராஷ்திராவில் உள்ள கட்கிலே மாவட்டத்தில் 1,00,000 கிலோ மீட்டர்கள் பைக் ஓட்டி சாதனை படைத்த யோகேஷ், 24 நாடுகள் மற்றும் 3 கண்டங்களை பயணிக்க இருப்பதாக அடுத்த சவாலை மேற்கொண்டுள்ளார். இது மும்பையில் இருந்து லண்டன் செல்லும் பயணமாகும். இந்த பயணத்தில் 25,000 கிலோ மீட்டர்களை 100 நாட்களுக்குள் அடைய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இவருடைய பைக் சாகசம் மகாராஷ்டிரா தினமான மே 1 ஆம் தேதி தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையிலிருந்து லண்டன் என்று கூறும்பொழுது இதில் எத்தனை சவால்கள் இருக்கின்றன, எந்த ஊர்களின் வழியாக, நாடுகளின் வழியாக செல்ல வேண்டும் மற்றும் அந்தந்த நாடுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் சவால்களை பற்றியெல்லாம் இவர் முழுவதுமாக அறிந்து கொண்டுள்ளார். இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக தயாராகி வருகிறார். அதுமட்டுமல்லாமல் யோகேஷ் ஏற்கனவே மயன்மார், வியட்நாம், கம்போடியா, நேபால் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பைக்கிலேயே பயணம் செய்திருக்கிறார். எனவே, இந்த மும்பை – லண்டன் பைக் பயணத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் இருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
ஆசியா ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட மூன்று கண்டங்களிலும் இவர் பயணிப்பார். மே ஒன்றாம் தேதி மும்பையில் இருக்கும் கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து இவருடைய பயணம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து நேபாள் சென்று, அங்கிருந்து அரேபியா எமிராட்டிக்கு விமானத்தில் செல்கிறார். அதற்கு பிறகு ஈரான், துருக்கி, இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வழியாக பைக்கில் பயணம் செய்து லண்டனை அடையும் திட்டத்தில் இருக்கிறார். லண்டனைச் சுற்றி பார்த்த பின்பு மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா செல்லவிருக்கிறார். அதை தொடர்ந்து மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் நாட்டிலும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். இறுதியாக ஸ்பெயின் நாட்டில் இவரது சுற்றுலா முடிந்த பிறகு அங்கிருந்து மீண்டும் இந்தியாவிற்கு வருவார் என்பது இவரது பயண திட்டத்தில் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike Riders, Trending, Viral