ஒருவருக்கு அன்பும் பாசமும் கொண்ட உறவுகள் எதிர்பாரத நேரத்தில் எதிர்பாராத ரூபத்தில் வந்து சேரும். அப்படித்தான் ஒரு பெண் தன்னைவிட 18 வயது இளையவரான வாலிபரை ஒரு பெண் 54 வயதில் தனது வாழ்க்கை துணையாக அடையாளம் கண்டுள்ளார்.
பிரிட்டனின் எசெக்ஸ் பகுதியில் வசிக்கும் 53 வயது பெண் ஆன் ஜான்சன். இவருக்கு 24 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி பிள்ளைகள் வளர்ந்து வந்த காலத்தில் ஆன்ஜான்சனுக்கு தனது திருமண வாழ்க்கை சுவரஸ்சிமற்று போனது. தனது கணவருடன் காதல் வொர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தார்.
வாழ்க்கை டல்லாக போன நிலையில்தான் இவரது பிள்ளைகள் வளர்ந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்த படிக்கத் தொடங்கினர். அப்போதுதான் அந்த பெண்ணுக்கு பால் என்ற நபருடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாலுக்கு வயது 30. ஆன்னை விட 24 வயது குறைவானவர். பாலுக்கு ஒரு காதலி இருந்துள்ளார். இவருக்கும் உறவு மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்தநிலையில், அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும் போது உறவை முறித்து பிரேக் அப் செய்துள்ளனர்.
இந்த காலத்தில் ஆன் மற்றும் பால் ஆகியோரின் நட்பு வளர்ந்து, அது காதலாக மலர்ந்துள்ளது. இவரும் அடிக்கடி சந்தித்து மனதை பரிமாறிக்கொண்ட நிலையில், 2014ஆம் ஆண்டு இருவரும் ரிலேஷன்ஷிப் உறவுக்கு செல்ல முடிவெடுத்தனர். தனது கணவரிடம் இதை நேரடியாக தெரிவிக்க முடியாமல், ஆன் ஒரு கடிதத்தை எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறி பால் உடன் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்.
தனது இரு மகன்களை அழைத்து இதை கூறவே அவர்கள் முதலில் அதிர்ச்சியில் உறைந்தனர். மூத்த மகன் மட்டும் இதை பக்குவமாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இளைய மகனோ அவர்கள் பார்க்கவும் விரும்பவதில்லையாம், போன் செய்தால் பதில் அளிப்பதில்லையாம்.
இதையும் படிங்க: காரில் இப்படியா அமர்ந்து ஊர்வலம் செல்வது..? மணமகளுக்கு அபராதம் விதித்த போலீஸ்...!
இந்நிலையில், தனது கணவரை விவாகரத்து செய்த ஆன், 2015ஆண்டு ஆண்டு பால் உடன் திருமணம் செய்து கொண்டு புதிய அத்தியாயத்தை தொடங்கினார். அன்று தொடங்கி தற்போது வரை தான் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், பால் தன்னைவிட 24 வயது இளையவர் என்றாலும் வயது வித்தியாசம் ஒரு தடை இல்லை என்கிறார் ஆன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UK, Viral News