முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மகளின் ஆண் நண்பருடன் காதலில் விழுந்த தாய்.. கதையைக் கேட்டு ஷாக்கில் உறைந்த மகள்!

மகளின் ஆண் நண்பருடன் காதலில் விழுந்த தாய்.. கதையைக் கேட்டு ஷாக்கில் உறைந்த மகள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அமெரிக்காவில் ஒரு பெண் தனது மகளின் பெஸ்ட் பிரெண்டை ரகசியமாக காதலித்து தற்போது திருமணம் முடிக்கவுள்ளார்.

  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashingtonWashington

காதல் உறவுகளில் எதிர்பாராத திருப்பங்கள் அந்நிய நபர்கள் மூலம் வந்து அந்த உறவில் மாற்றங்களை உருவாக்கும் கதைகளை நாம் அறிந்திருப்போம். ஆனால், இங்கு ஒரு இளம்பெண்ணுக்கு தனது தாய் மூலமாகவே அத்தகைய அதிர்ச்சிக்குரிய ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது என்றால் நம்பமுடிகிறதா. ஆம் ‘தி மிரர்’ செய்தி ஊடகம் இத்தகைய சம்பவத்தினை செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் இளம்பெண் ஒரு இளைஞருடன் ஐந்தாண்டுகளாக ஒரு நபருடன் நெருக்கமான பெஸ்ட் பிரெண்டாக இருந்து வந்துள்ளார். இருவரும் உயர் கல்வியை ஒன்றாக பயின்று வந்துள்ளனர். இந்த இந்த இருவரின் நட்பு பெண்ணின் தாய்க்கும் தெரியும். அந்த இளம்பெண்ணின் தாயார் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கோவிட்-19 லாக்டவுன் காலத்தில் அந்த இளைஞரின் அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்யுமாறு கூறவே, வசிப்பிடம் இன்றி அவர் தவித்துள்ளார்.

எனவே, அந்த இளம்பெண் தங்கள் வீட்டில் தங்கிக்கொள்ளமாறு கூறியுள்ளார். பெண்ணின் தாயாரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த இளைஞர், இளம்பெண்ணின் வீட்டிலேயே குடியேறியுள்ளார். இளம்பெண்ணுக்கு வேலை கிடைத்து அவர் நைட் ஷிப்ட் பார்த்து வந்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் இளம்பெண்ணின் தாயாருக்கும் பெண்ணின் நெருங்கிய நண்பரான இளைஞருக்கும் காதல் உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவு பல மாதங்களாக பூத்து மலர்ந்து திருமணம் என்ற நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆனால், இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு கடைசி வரை தெரியவரவில்லை.

இதையும் படிங்க: அம்மாடியோவ்.. ஒரு மாம்பழத்தின் விலை ரூ.19,000.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல?

ஒரு நாள் பெண்ணின் தாயார் நான் உனது பெஸ்ட் பிரெண்டை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், இதோ திருமண நிச்சய மோதிரத்தை பார் என்ற காட்டவே, அந்த பெண்ணுக்கு ஆச்சிரியம் மட்டுமல்லாது ஒரு கணம் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தாய் சொன்னதை கேட்டு பெரும் வருத்தம் கொண்ட தற்போது பெண் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளார்.

top videos

    43 வயதான தனது தாயார், தன்னுடன் கல்லூரியில் படித்த நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்வது மோசமான உணர்வை தருவதாக அந்த பெண் தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தனது பெஸ்ட் பிரெண்டாக பழகியவர், தனது தாயாரின் கணவராக அதாவது தந்தை ஸ்தானத்தில் வருவது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை நிச்சயம் தரத்தானே செய்யும்.

    First published:

    Tags: Lovers, Viral News