முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / குட்டியை காப்பாற்ற முதலையுடன் கொடூரமாக சண்டையிட்ட தாய் யானை... அதிர்ச்சி வீடியோ..

குட்டியை காப்பாற்ற முதலையுடன் கொடூரமாக சண்டையிட்ட தாய் யானை... அதிர்ச்சி வீடியோ..

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

மனிதர்களைப் போலவே விலங்குகளும் குடும்பம் குடும்பமாக வாழும் இயல்புடையவை. அந்த வகையில் தாயின் அன்பை பறைசாற்றும் விதமாக குட்டியை காப்பாற்ற முதலையுடன் சண்டை இட்ட தாய் யானையின் வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனது குட்டியை தாக்க வந்த முதலையுடன் தாய் யானை ஒன்று கடுமையாக சண்டையிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அனைவரும் தாயின் அன்பு எந்த அளவிற்கு புனிதமானது என்பதை பற்றியும், தனது குழந்தைகளை காப்பாற்ற ஒரு தாய் எந்த எல்லைக்கும் செல்வாள் என்றும் இணையத்தில் புகழ்ந்து வருகின்றனர்.

எப்போதுமே எத்தனை பேர் இருந்தாலும் அனைவருக்கும் தாயின் அன்பும் அக்கறையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத படி தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் இது பொருந்தும். மனிதர்களைப் போலவே விலங்குகளும் குடும்பம் குடும்பமாக வாழும் இயல்புடையவை. அந்த வகையில் தாயின் அன்பை பறைசாற்றும் விதமாக குட்டியை காப்பாற்ற முதலையுடன் சண்டை இட்ட தாய் யானையின் வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது

அந்த வீடியோவில் தாய் யானை ஒன்றும் அதன் குட்டி ஒன்றும் மிகச் சிறிய குளம் ஒன்றில் நீர் அருந்தி கொண்டிருக்கின்றன. குட்டி யானை தனது தாயின் கீழ் மிகவும் நெருக்கமாகவும் பாதுகாப்பாகவும் தண்ணீர் அருந்தி கொண்டிருக்கிறது. நீண்ட நேரமாக இதனை பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறிய குளத்திற்குள் இருந்த முதலை ஒன்று திடீரென அந்த குட்டி யானையை தாக்குவதற்காக குளத்தில் இருந்து வெளியே வருகிறது.

Read More : ரூ.24 லட்சம் செலவு.. உடலை ஆபரேஷன் செய்து ஏலியன் போல மாறிய நபர்..!

உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த தாய் யானை, தனது குட்டியை முதலையின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்காக, தனது நான்கு கால்களுக்கும் இடையில் அந்த குட்டியை பாதுகாப்பாக அணைத்துக் கொண்டது.

மேலும் குளத்தில் இருந்த அந்த முதலையையும் தனது கால்களை கொண்டு மிதித்து தாக்க முயற்சி செய்கிறது. மேலும் இந்த தாக்குதலின் போது தாய் யானைக்கும் முதலையினால் காயம் ஏற்பட வாய்ப்புகள் இருந்தது. ஆனாலும் தனது குட்டியை பாதுகாக்கும் பொருட்டு தாய் யானை எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதலையின் மீது தாக்குதலை நடத்தியது. சிறிது நேரத்தில் நிலைகுலைந்த முதலையானது தாய் யானையின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல், குளத்திலிருந்து வேக வேகமாக வெளியேறிவிட்டது.

தனது உயிரைக்கூட பெரிதுபடுத்தாமல் அந்த முதலையிடம் சண்டை போட்டு தனது குட்டியை பாதுகாத்த அந்த தாய் யானையை பலரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். தாயின் அன்பு எப்பேர்பட்ட புனிதமானது என்றும், தனது குழந்தைகளுக்காக ஒரு தாய் என்னவெல்லாம் செய்வாள் என்பதை பற்றி பல்வேறு வித விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நடந்து கொண்டுள்ளன.

top videos

    இதைப் பற்றி இணையதளவாசி ஒருவர் கூறுகையில், “யானைகள் எப்போதுமே தனக்கு ஆபத்து விளைவித்தவரையோ அல்லது தங்கள் கூட்டத்தில் ஒருவரை கொன்றவரையோ மறக்கவே மறக்காது. எப்போதும் ஞாபகம் வைத்திருக்கும்” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். “யானை தனது எடை மற்றும் வலிமையை பயன்படுத்தி முதலையை கொல்ல முயற்சித்தது மிகவும் அற்புதமான ஒரு விஷயம்” என்று மற்றொருவர் யானையை பாராட்டியுள்ளார்.

    First published:

    Tags: Trending, Viral