டிஜிட்டல் பரிவர்த்தனைகள், வாட்ஸ் அப், இமெயில் மூலமாக அலுவலக தொடர்புகள் என்று நம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக செல்ஃபோன் மாறிவிட்டது. இன்றைய டச் ஸ்கிரீன் வருவதற்கு முன்பாக மக்கள் யாரும் இவ்வளவு தூரம் ஃபோன் பயன்படுத்தியதில்லை.பட்டன் ஃபோன் இருந்த காலங்களில் யாரையேனும் அழைத்து பேசுதல் அல்லது பதில் அளித்தல் அல்லது மெசேஜ் அனுப்புதல் என்ற ரீதியில் தான் பயன்பட்டு வந்தது. பின்னர் ஸ்மார்ட் ஃபோன்களில் இடம்பெற்ற கேமரா, வீடியோ, சோஷியல் மீடியாக்கள் போன்றவை நம் வாழ்வின் பெரும்பகுதி நேரத்தை ஆக்கிரமிக்க தொடங்கி விட்டன.
50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிப்பு
பரிணாம வளர்ச்சியில் நாம் பயன்படுத்துகின்ற ஸ்மார்ட்ஃபோன்களின் அடித்தளமான முதலாவது மொபைல் ஃபோன் கடந்த 50 ஆண்டுகளுக்கும் முன்பாக உருவாக்கப்பட்டது. முதன் முதலில் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மொபைலில் இருந்து முதலாவது அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். முதலாவது மொபைல் சுமார் ஒரு கிலோ எடை கொண்டதாக இருந்ததாம். மேலும், பேட்டரி திறன் என்பது 25 நிமிடங்கள் டாக் டைம் கொண்டதாக இருந்தது. அவ்வளவு எடை கொண்ட மொபைலை யாரும் அரை மணிநேரம் தூக்கிப் பிடித்து பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதால் தொடக்க காலகட்டத்தில் அதன் பயன்பாடு குறைவாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது.
Read More : சர்வர் பெண்ணுக்கு அலேக்காக காரை டிப்ஸ்சாக கொடுத்த நபர்...
உருவாக்கிய பொறியாளர் கவலை :
மொபைல் ஃபோன்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மார்டின் கூப்பர் ஆவார். இவர் அமெரிக்கப் பொறியாளர். மோடோராலா நிறுவனத்தில் மொபைல் கண்டுபிடிக்கும் நோக்கில் பணியாற்றிய குழுவில் இவர் பிரதானமாக இடம்பெற்றிருந்தார். தற்போது ஸ்கிரீன் டைமிங் அதிகரித்திருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
“சில நபர்கள் சாலையை கடந்து செல்லும்போது கூட செல்ஃபோன் பயன்படுத்தியபடி செல்வதை பார்த்து கவலையாக உள்ளது. அந்த நபர்கள் தன்னிலை மறந்து சென்று கொண்டிருக்கின்றனர்’’ என்றார் அவர். மேலும், செல்ஃபோன் பயன்படுத்தியபடி செல்லும் சிலர் மீது இறுதியாக கார் ஏறி விடுகிறது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
ஐஃபோன், ஆப்பிள் வாட்ச் பயன்படுத்தும் மார்டின் கூப்பர் : உலக மக்கள் குறித்து கவலை கொள்ளும் மார்டின் கூப்பருக்கு தற்போது 94 வயது ஆகிறது. அவரே கூட தன் கையில் உயர் ரக ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் கட்டியிருப்பதுடன், விலை உயர்ந்த ஆப்பிள் ஐஃபோன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
எனினும், தன்னுடைய பேரப்பிள்ளைகள், கொல்லுப் பேரப்பிள்ளைகள் செல்ஃபோன் பயன்படுத்துகின்ற அளவுக்கு, தானும் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் இருப்பதாக கூறுகிறார் மார்டின் கூப்பர். ஒவ்வொரு தலைமுறையினரும் முந்தைய தலைமுறையை விட சாதுர்யமாக செயல்படுபவர்கள் என்றும், செல்ஃபோனை மிக பயனுள்ள வகையில் மாற்றிக் கொள்வது எப்படி என்பதை அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mobile phone, Technology