முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பெட்ரோலுக்கு பதில் டீசல்.. கார் டெலிவரியின் போது நடந்த தவறு.. ட்விட்டரில் நடந்த பஞ்சாயத்து!

பெட்ரோலுக்கு பதில் டீசல்.. கார் டெலிவரியின் போது நடந்த தவறு.. ட்விட்டரில் நடந்த பஞ்சாயத்து!

கார்

கார்

புதிதாக வாங்கப்பட்ட XUV700 காரின் பெட்ரோல் டேங்கில், வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வதற்கு சற்று முன்னதாக ஒரு டீலர் பெட்ரோலுக்கு பதில் டீசலை தவறுதலாக நிரப்பியதாக கூறப்படுகிறது.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில மாதங்களாகவே Mahindra நிறுவனத்தின் XUV700 பிரபலமாக உள்ளது மற்றும் அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. இதற்கு இந்த காருக்கான அதிக டிமாண்ட், வெயிட்டிங் பீரியட் என பல காரணங்கள் உள்ளன.

தவிர XUV700 கார் பற்றிய இரண்டு சம்பவங்கள் இப்போது நாடு முழுவதும் விவாதிக்கப்படும் வகையில் நடந்துள்ளன. முதலில் ஜெய்ப்பூர் அருகே உள்ள நெடுஞ்சாலையில் XUV700-ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலானது. ஆனால் வாடிக்கையாளர் வாகனத்தில் சில வெளிப்புற உபகரணங்களை நிறுவியதால், வயரிங் சேதமடைந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவனம் தெளிவான விளக்கம் அளித்தது.

மற்றொன்று மஹிந்திரா டீலர்ஷிப்பில் ஒரு பெரிய தவறு நடந்து அது தொடர்பாக வாடிக்கையாளர் ஷேர் செய்துள்ள ட்விட் வைரலாகி இருக்கிறது. புதிதாக வாங்கப்பட்ட XUV700 காரின் பெட்ரோல் டேங்கில், வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வதற்கு சற்று முன்னதாக ஒரு டீலர் பெட்ரோலுக்கு பதில் டீசலை தவறுதலாக நிரப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், டெலிவரிக்கு முன்பே அவர்கள் செய்த தவறை உணர்ந்த டீலர்ஷிப் குறிப்பிட்ட XUV700 வாகனத்தின் டேங்கில் இருந்து டீசலை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, எழுத்துப்பூர்வ நிபந்தனைகளின் பேரில் குறிப்பிட்ட வாடிக்கையாளர் காரை டெலிவரி எடுத்து கொண்டார். ஆனால் மறுநாள் அந்த காரை இயக்கும் போது திடீரென நின்றது. மேலும் அதிலிருந்து பெட்ரோல் கசிய ஆரம்பித்தது. அதிக எரிபொருள் கசிவு காரணமாக கார் இயங்காமல் நின்றது. எரிபொருள் கசிவு அபாயகரமான விபத்துகளுக்கு வழிவகுத்திருக்கலாம் என்பதால் இது ஒரு கடுமையான பிரச்சினையாகும். இதனால் கோபமடைந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர், ட்விட்டரில் டீலர் செய்த தவறை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். மேலும் இந்த ட்வீட் வைரலானது. வாடிக்கையாளர் தனது ட்விட்டில் மாற்று எரிபொருள் நிரப்பப்பட்டதால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்றும், தனக்கு டெலிவரி செய்யப்பட்ட XUV700 காருக்கு பதில், வேறு புதிய XUV700 காரை மாற்றி தருமாறும் கோரியுள்ளார்.

https://twitter.com/Mahindra_Auto/status/1660594816911134721

வாடிக்கையாளரின் வைரல் ட்விட்டிற்கு பதிலளித்துள்ள மஹிந்திரா நிறுவனம், விஷயத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியது. சாத்தியமான எல்லா வழிகளிலும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவ முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ளது.

Also Read : ரியர் ஸ்டீயரிங் டெக்னாலஜி..! இனி பைக்கின் பின் சக்கரத்தையும் திருப்பலாம் - அறிமுகப்படுத்த தயாராகும் பிஎம்டபிள்யூ!

வேறுபாடு என்ன?

பெட்ரோலுக்கும், டீசலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இரண்டுக்கும் இடையே இருக்கும் முக்கிய வேறுபாடு ignition point-ல் உள்ளது. பெட்ரோல் வேகமாக எரிகிறது ஆனால் டீசல் எரிவதற்கு அதிக அழுத்தம் தேவை. பெட்ரோல் வாகனத்தில் டீசல் போட்டால், வாகனத்தின் பிஸ்டன்களுக்கு அதன் இன்ஜெக்டர்களும் சேதமடையலாம். மேலும், காரின் பல சென்சார்களும் இதனால் சேதமடைய வாய்ப்புள்ளது. அதே போல டீசல் இன்ஜினின் ரப்பர் சீல்களும் பெட்ரோலின் க்ளீனிங் மற்றும் ட்ரையிங் விளைவுகளை தாங்கும் வகையில் உருவாக்கப்படவில்லை.

மஹிந்திரா XUV 700 காரானது அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா தயாரிப்புகளில் ஒன்றாகும். இந்த ஃபிளாக்ஷிப் எஸ்யூவி 17 மாதங்களுக்கும் மேலாக வெயிட்டிங் பீரியட்-ஐ கொண்டுள்ளது. XUV 700-ஆனது 2.0L டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது, இது 5000 rpm-ல் 197 bhp மற்றும் 1750-3000 rpm இடையே 380 Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும். தவிர 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் ஆப்ஷனும் உள்ளது. இது 3500 rpm-ல் 182 bhp பவரையும், 360Nm பீக் டார்க்கையும் வழங்கும்.

First published:

Tags: Automobile, Mahindra