முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்த குளத்தில் குளித்தால் நோய்கள் தீருமாம்... ஒரு கிராம மக்களின் நம்பிக்கை... மேற்கு வங்கத்தில் விநோதம்...!

இந்த குளத்தில் குளித்தால் நோய்கள் தீருமாம்... ஒரு கிராம மக்களின் நம்பிக்கை... மேற்கு வங்கத்தில் விநோதம்...!

மோடா புக்கூர் குளம்

மோடா புக்கூர் குளம்

மேற்கு வங்காளத்தில் இருக்கும் ஒரு குளம் பற்றிய விநோத தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 

  • Last Updated :
  • West Bengal, India

குளம், ஆறு, கடல் போன்றவை ஆன்மிகத்துடன் தொடர்புடையவை. இந்தியாவில் பல இடங்களில் கோவிலை ஒட்டி இருக்கும் குளம், கடல் போன்றவற்றில் குளித்துவிட்டு பூஜை, யாகம், கோவில் தரிசனம் செய்வது வழக்கம். ஒரு சில இடங்களில் குளித்தால், நோய்கள் தீரும் என்ற நம்பிக்கையும் உண்டு.

அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் இருக்கும் ஒரு குளம் பற்றிய அதிசய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இங்கு ஹவுராவில் இருக்கும் ஒரு குளத்தில் குளித்தால்  நோய்கள் தீரும் என்று மேற்கு வங்காளத்தில் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கொல்கத்தாவில் உள்ள ஹவுரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மோடா புக்கூர் என்ற குளத்தில் குளித்தால், உடலில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கின்றனர். அதாவது உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி இந்த குளத்தில் மூழ்கி எழுந்தால் ஒல்லியாக இருப்பவர்கள் உடல் கொஞ்சம் பூசியது போல மாறுவதாகவும், இந்த குளத்தில் குளித்தால் உடலில் பலவிதமான நோய்கள் தீருவதாகவும் கூறுகின்றனர். குளத்தில் குளிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி மேற்கு வங்காளம் முழுவதுமே பகிரப்பட்டு இந்த குளம் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

தற்போது குளமாக இருக்கும் இந்தப் பகுதி முன்பு சில பல ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய ஏரியாக இருந்தது. இந்த ஏரி முழுவதுமே தாமரை செடிகள் மற்றும் மீன்களால் நிரம்பியிருந்தன. இப்போது ஹவுரா மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் அனைவருமே இந்த குளத்தில் குளிப்பதற்காக வருகிறார்கள். இதில் குளித்தாலே பலவிதமான நோய்கள் தீர்வதாக நம்புகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஒல்லியான உடலை குண்டாக மாற்றுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஒரு குளத்திற்கு இவ்வளவு மகிமை இருந்தாலே அந்த குளத்தில் அருகிலேயே பிரசித்தி பெற்ற கோவில் நிச்சயமாக இருக்கும். இந்த குளத்து கரையில் வட மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் சண்டி தேவியின் ஆலயம் ஒன்றும், மரம் ஒன்றும் இருக்கிறது. குளிக்கும் முன்பு அல்லது குளத்து நீரில் கால் வைக்கும் முன்பு, மரத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் தடவி வழிபட வேண்டும் என்பதை ஐதீகமாக பின்பற்றுகின்றனர்.

குளத்தில் குளித்த பிறகு ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழங்கி நோய்கள் தீர பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். அதுமட்டுமில்லாமல் நோய்களில் இருந்து நிவாரணம் பெற்றவர்கள், மீண்டு வந்தவர்கள், அனைவருமே தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு பூஜையும் யாகங்களும் செய்கிறார்கள். ஒவ்வொரு ஞாயிறும் கணிசமான எண்ணிக்கையில் பக்தர்கள் குளக்கரையில் அமர்ந்து பூஜை செய்கிறார்கள்.

குளத்தில் குளித்த பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் வீட்டில் குளிக்க வேண்டும் என்பது நம்பிக்கை. இதனால் குளத்தில் இருந்து தண்ணீரை வீட்டில் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த குளத்து நீர் பலவிதமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது என்று இந்த கோவிலின் நிர்வாகி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உடல் ரீதியான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது என்று தெரிவித்தார். நோய்கள் மற்றும் உடல்நல கோளாறுகள் மட்டுமல்லாமல் தங்களுடைய லட்சியம், ஆசை, கனவுகள் நிறைவேறவும், வெற்றி பெறவும் பலரும் இந்த கோவிலில் வந்து குளித்து வேண்டுதல்களை முன்வைக்கிறார்கள்.

மிகவும் ஒல்லியாக, சத்து குறைபாடு மற்றும் ஒரு சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த குளத்தில் வந்து குளித்தால் உடல் ஆரோக்கியமாகவும் மாறுவதாக ஒரு உள்ளூர் வாசி தெரிவித்திருக்கிறார். இந்த இந்த குளத்தில் குளிப்பதால் ஏற்படக்கூடிய கிடைக்கும் அற்புதங்கள் பற்றி செய்தி நாடு முழுவதும் பரவத் தொடங்கிய நிலையில் வெளியூர் வாசிகளும் இந்த தகவலை கேள்விப்பட்டு இந்த குளத்தில் குளிப்பதற்கு வருகிறார்கள்.

Also Read : Letter Puzzle | இந்த கட்டத்தில் விடுபட்ட எழுத்தை சரியாக நிரப்புங்க மக்களே!

வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு, மீண்டும் வந்து பூஜை செய்து தங்களுடைய நன்றிக் கடனை செலுத்துகிறார்கள் என்று நியூஸ் 18 செய்திகளுக்கு பிரத்யேகமாக தெரிவிக்கப்பட்டது. குளத்து தண்ணீரில் இருக்கும் மருத்துவ குணங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் உள்ளூர் வாசிகள் அதிக அளவு நம்பிக்கையும் பக்தியும் வைத்திருக்கிறார்கள்.

top videos

    இதைத் தொடர்ந்து பல இடங்களில் இருந்தும் கோவிலுக்கு வருகைத் தரும் பக்தர்களுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சண்டி தேவியின் ஆலயம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த குளம், பங்கன்-ஷம்பூர் மாநில ஹைவேயில் பங்கன் லைப்ரரி ஜங்ஷன் அருகில் அமைந்துள்ளது.

    First published:

    Tags: Viral News