முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / நதியில் கோடிக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்....வைரலான வீடியோ..

நதியில் கோடிக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்....வைரலான வீடியோ..

நதியில் மிதக்கும் இறந்த மீன்கள்

நதியில் மிதக்கும் இறந்த மீன்கள்

ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் மீனகள் நதியில் செத்து மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaAustralia Australia

ஆஸ்திரேலியாவில் உள்ள கிராமப்பகுதியான மெனிண்டீ என்ற இடத்தில் உள்ள டார்லிங் நதியில் கோடிக்கணக்கில் மீன்கள் செத்துக்கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலைக் காரணமாக நதியில் உள்ள மீன்கள் இறந்துகிடக்கலாம் என்று கூறப்படுகிறது.

வைரலான வீடியோவில், நதியில் நீர் தெரியாத அளவிற்கு இறந்த மற்றும் அழுகிய மீன்கள் குவிந்துள்ளது தெரிகிறது. அதனால் அப்பகுதியில் படகுகள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்குப் பின் தற்போது தான் பெரிய அளவில் மீன்கள் இறந்துள்ளதாக அப்பகுதி அரசு தெரிவித்துள்ளது.

மீன்கள் நதியில் வாழ்வதற்குச் சரியான அளவில் வெப்பம் நீரில் இருக்க வேண்டும். ஆனால் அங்கு ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தினால் காரணத்தினால் வெப்பத்தில் அளவு அதிகரித்துள்ளது. அதனால் நதியின் வெப்பத்தன்மை அதிகரித்து நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைந்து மீன்கள் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Also Read : Math Riddle | முக்கோணத்தின் லாஜிக் புரிந்து விடுபட்ட எண்ணை கண்டுபிடிங்க மக்களே!

கடந்த காலங்களில் அப்பகுதி வெள்ளம் மற்றும் பயிர் சேதத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், நதி மீன்களில் இறப்பு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Australia, Viral Video