உடல் உழைப்பினால் ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம்முடைய முன்னோர்கள். இன்றைக்கு நிலைமை முற்றிலும் மாறிவிட்டதால் பல உடல் நலப்பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. இதோடு மட்டுமின்றி ஒருபுறம் உடல் பருமனும் ஒரு பிரச்சனையாக மாறிவருகிறது.
இந்த சூழலில் தான், நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் ஜிம்மிற்கு செல்வதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதே சமயம் ஒரு சிலர் தன்னுடைய இலக்கை வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறி தான். ஒவ்வொரு புத்தாண்டு பண்டிகை வரும் போதெல்லாம் ஜிம்மிற்கு தவறாமல் சென்றே ஆக வேண்டும் என்ற தீர்மானம் போட்டாலும், அவர்களால் நிச்சயம் இதை பின்பற்ற முடியாது. ஆனால் இவர்களைப் போன்றவர்களுக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் தன்னுடைய 103 வயதிலும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சியை மேற்கொள்கிறார் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 103 வயதான பெண் தெரேசா மூர்.
யார் இந்த தெரசா மூர்..? : இத்தாலியில் பிறந்த இவர், கடந்த 1946 ஆம் ஆண்டு ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்துக்கொண்டார் எனவும், பின்னர் பல்வேறு உலக நாடுகளில் வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்வினால் குடியேறியுள்ளார் என்கிறது அறிக்கை. இவருக்கு இளம் வயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. மேலும் தான் செய்யும் வேலையை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்திவிடக்கூடாது என்ற எண்ணத்தில் வாழ்ந்ததால் தான், எங்கு சென்றாலும் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை ஜிம்மிற்குச் செல்கிறார்.
எதற்காகவும் இந்த வேலையைத் தள்ளிப்போட்டது இல்லையாம். மற்ற இளைஞர்களை செய்ய தயங்கும் ஒர்க் அவுட்டைக் கூட சுலபமாக செய்யும் திறன் உள்ளது என்றும், நல்ல ஹேர்ஸ்டைல் மற்றும் மேக் அப்வுடன் ஜிம்மிற்கு வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமையும் என்கின்றனர் ஜிம்மிற்கு வரக்கூடிய பயிற்சியாளர்கள்.
வொர்க் அவுட் பற்றி பேசும் தெரசா, உடற்பயிற்சி செய்வது தனக்கு ஆற்றலை தருவதாகவும், தன்னுடைய தாயின் சாகச குணம் தான் தன்னை ஜிம்மிற்கு அழைத்துச் செல்கிறது என்றும் தெரசா மூர் தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து தெரசா மூர்ரின் மகள் பேசுகையில், என்னுடைய அம்மா எதையும் ஆர்வமாக செய்வார் என்றும், ஜிம்மிற்குச் சென்று நண்பர்களைச் சந்தித்து வருவதால் இந்த வயதிலும் ஆரோக்கியத்துடன் உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் உள்ளார் என்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.