முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / களவாணி பட பாணியில் ஓடும் லாரியில் இருந்து ஆடுகளைத் திருடிய நபர்... பரபரப்பு வீடியோ...!

களவாணி பட பாணியில் ஓடும் லாரியில் இருந்து ஆடுகளைத் திருடிய நபர்... பரபரப்பு வீடியோ...!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Goat Theft | ஓடும் லாரியில் இருந்து ஆடுகளை திருடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மகாராஷ்டிரா மாநிலத்தில் களவாணி பட பாணியில் ஓடும் லாரியில் இருந்து ஆடுகளை சாலையில் தூக்கிப் போட்டு கடத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இகட்புரி பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், லாரியின் பின்பக்கம் ஏறிய நபர் ஒருவர் சுமார் 5 முதல் 6 ஆடுகளை பரபரப்பான நெடுஞ்சாலையில் தூக்கி வீசினார். பின்னர் லாரியில் இருந்து கார் மூலம் இறங்கி அந்த ஆடுகளை கடத்திக்கொண்டு தப்பிச் செல்கிறார்கள்.

சினிமாவில் வரும் கடத்தல் காட்சிகளை மிஞ்சும் வகையில் பரபரப்பாக நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ, பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு உத்தர பிரதேச உன்னாவ் காவல்துறை பதிலளித்துள்ளது.

அப்பகுதியில் சுற்றி இருக்கும் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றதா அல்லது மகாராஷ்டிராவில் நடைபெற்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

top videos
    First published:

    Tags: Theft, Viral Video