முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ''காதலி கிடைக்கல”.. உயரத்தை அதிகரிக்க ரூ.1 கோடி செலவு செய்து காலில் ஆபரேஷன்..!

''காதலி கிடைக்கல”.. உயரத்தை அதிகரிக்க ரூ.1 கோடி செலவு செய்து காலில் ஆபரேஷன்..!

அறுவை சிகிச்சை செய்த நபர்

அறுவை சிகிச்சை செய்த நபர்

ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரம் கொண்ட இந்த நபர் தனது உயரத்தில் ஐந்து அங்குலத்தை அதிகரிப்பதற்காக தன்னுடைய காலில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். ஒரு பெண்ணை கவர்ந்து, அவருடன் டேட்டிங் செய்வதற்காக இதனை செய்துள்ளார் என்பது தான் பலருக்கும் ஆச்சரியம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • interna, IndiaAmericaAmericaAmerica

ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரம் கொண்ட ஒரு நபர் வலி மிகுந்த கால் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதன் மூலமாக தனது உயரத்தில் 5 அங்குலத்தை கூட்டியுள்ளார். தான் நீண்ட காலமாக பேச நினைக்கும் ஒரு பெண்ணிடம் பேசுவதன் பொருட்டு தன் தன்னம்பிக்கையை அதிகரிப்பதன் காரணமாகவே இவர் இதனை செய்துள்ளார் என்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் உள்ள மினியாபோலிஸ் என்ற பகுதியில் வசிப்பவர் மோசஸ் கிப்சான். இவர் தனது சிறுவயதிலிருந்தே தான் உயரம் குறைவாக இருப்பது பற்றி கவலை கொண்டுள்ளார் மற்றும் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துள்ளார். 41 வயது மோசஸ் தன் உயரம் குறித்த ஒரு குற்ற உணர்வு இருந்ததன் காரணமாகவே பல ஆண்டுகளாக பெண்களிடம் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார்." நான் 15 வயதாக இருக்கும் போது, என்னுடைய சக நண்பர்கள் என்னை விட உயரமாக இருப்பதை நான் உணர்ந்தேன்.

இந்த உணர்வு ஆழமாக எனக்குள் பதிய ஆரம்பித்தது. நான் பயன்படுத்தும் ஷூவினுள் ஏதாவது ஒரு பொருளை வைத்து என்னை உயரமாக காட்டிக் கொள்ள நான் பலமுறை முயற்சி செய்து உள்ளேன்."என்று மோசஸ் கூறினார். உயரமாவதற்காக மருந்துகளை எடுத்துக் கொள்ள மோசஸ் முயற்சி செய்துள்ளார். அதோடு மத போதகரிடமும் சென்று தான் உயரமாவதற்கு ஏதேனும் வழி உள்ளதா என்றும் கேட்டுள்ளார். எந்த ஒரு முயற்சியும் பலன் அளிக்காததால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்.

Read More : 67 வயது நோயாளிக்கு அரிதான இதய அறுவை சிகிச்சை..! - ஹைதராபாத் மருத்துவர்கள் சாதனை

பகல் நேரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த மோசஸ் அறுவை சிகிச்சைக்கான பணத்தை சேர்க்க இரவு நேரங்களில் ஊபர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் நினைத்தபடி 2016-ஆம் ஆண்டு முதல் முறையாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டு தனது உயரத்தில் மூன்று அங்குலத்தை கூட்டினார்.எனினும் இதில் திருப்தி அடையாத மோசஸ் மீண்டும் கடந்த மாதம் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். மோசஸின் டிபியா மற்றும் ஃபிபுளா எலும்புகளை உடைத்து அவரை உயரமாக காட்டுவதற்காக மேக்னெட்டிக் ஆணிகளை மருத்துவர்கள் பயன்படுத்தினர்.

இந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த பிறகு மோசஸின் உயரம் ஐந்து அடி பத்து அங்குலமாக இருக்கும் இவர் தற்போது தனது உயரத்தை கூட்டி கொடுக்கும் சாதனத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை பயன்படுத்த வேண்டி இருக்கும்."நான் உயரம் குறைவாக இருந்ததன் காரணமாக பெண்களிடம் பேசுவதற்கு எனக்கு கூச்சமாக இருந்தது. நான் ஷார்ட்ஸ் அணிய ஆரம்பித்தேன். அதோடு என் முழு உடலையும் புகைப்படமாக எடுத்துப் பார்த்தேன். இது போன்ற மோசமான உணர்வு யாருக்கும் வரக்கூடாது. " என்று தனது அறுவை சிகிச்சைக்கு பிறகு மோசஸ் கூறியுள்ளார்.

top videos

    உயரத்துக்காக மோசஸ் செய்த விஷயம் குறித்து பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இணையவாசிகள்  சிலர் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்யாமல் அறுவை சிகிச்சை வரை சென்றிருக்க வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளனர்

    First published:

    Tags: America, Trending, Viral