முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Video: பொம்மைதான் குடும்பம்.. மனைவி, குழந்தை என சுற்றும் இளைஞர்.. சோஷியல் மீடியாவில் வைரல்!

Video: பொம்மைதான் குடும்பம்.. மனைவி, குழந்தை என சுற்றும் இளைஞர்.. சோஷியல் மீடியாவில் வைரல்!

பொம்மை காதலியுடன்  கிறிஸ்டியன் மாண்டினீக்ரோ

பொம்மை காதலியுடன் கிறிஸ்டியன் மாண்டினீக்ரோ

காதலி நடாலியா ஒரு பிறந்த குழந்தை(பொம்மை) உடன் மருத்துவமனையில் உள்ளது போல உள்ளது. மேலும் நடாலியாவிற்கு மருத்துவர் ஒரு லேப் கோட்டுடன் பிரசவம் பார்த்ததை போலவும் புகைப்படத்தை அவர் பதிவேற்றியுள்ளார்.

  • Last Updated :
  • inter, Indiacolombiacolombiacolombia

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றுபோல இருப்பதில்லை. பலர் தங்களது வித்தியாசமான செயல்களால் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். இன்னும் பலரின் அன்றாட செயல்கள் கூட பிறரால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. அப்படி ஒருவர் தான் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

கொலம்பியாவை சேர்ந்தவர் கிறிஸ்டியன் மாண்டினீக்ரோ. இவர், ஒரு பொம்மையை தனது காதலியாக ஏற்று, அவருடன் நேரம் செலவழித்து அந்த வீடியோக்களை தனது டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றி வந்தார். நடாலியா என்ற பெயர் கொண்ட அந்த பொம்மையுடன் அவ்வப்போது அவர் பதிவிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் அவர் அந்த பொம்மையை தனது பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து நிச்சயம் செய்து கொண்டதாகவும் அறிவித்தார்.

இதையும் படிக்க : Video: மணமகளின் முகத்தில் எரிந்த தீ.. திருமண கொண்டாட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்!

இந்நிலையில் அந்த பொம்மை கர்பமாக இருப்பதை போல புகைப்படத்தை பதிவேற்றி இருந்த அவர், தற்போது குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு குழந்தை உள்ளது என கூறிய அவருக்கு, இது அவர்களது மூன்றாவது குழந்தையாகும். அவர் பதிவேற்றியுள்ள அந்த புகைப்படத்தில், அவரது காதலி நடாலியா ஒரு பிறந்த குழந்தை(பொம்மை) உடன் மருத்துவமனையில் உள்ளது போல உள்ளது. மேலும் நடாலியாவிற்கு மருத்துவர் ஒரு லேப் கோட்டுடன் பிரசவம் பார்த்ததை போலவும் அந்த புகைப்படத்தில் அவர் பதிவேற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த குழந்தைகளை (பொம்மைகளை) பார்த்து அவர் கண்ணீர் விட்டு அழுவது போல அவர் பதிவிட்டது தான் அனைத்தையும் விடவும் உச்சம். மேலும் பிரசவம் வெற்றிகரமாக முடிந்ததாக அனைவரையும் சேர்த்து செல்ஃபி புகைப்படத்தையும் அவர் பதிவேற்றியுள்ளார்.

இவை அனைத்தையும் ரசிப்பதற்காக ஒரு கூட்டமும், இவர் ஆப்ஜக்டோபிலியா (Objectophilia), அதாவது உயிரற்ற பொருட்கள் மீது காதல் கொள்ளும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு கூட்டமும் இணையத்தில் விவாதம் நடத்தி வருகிறார்கள்.

top videos


    First published:

    Tags: Viral, Viral News