முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 6 நாளில் 7 உலக அதிசயங்களைச் சுற்றிப் பார்த்தவர்..! அசர வைக்கும் வீடியோ பதிவு..

6 நாளில் 7 உலக அதிசயங்களைச் சுற்றிப் பார்த்தவர்..! அசர வைக்கும் வீடியோ பதிவு..

ஜேமி மெக்டொனால்ட்

ஜேமி மெக்டொனால்ட்

சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற நிறுவனம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு நிதி திரட்டவே இந்த சாகசப் பயணத்தை செய்துள்ளார் ஜேமி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஏழு உலக அதிசயங்களையும் என்றாவது ஒருநாள் பார்ப்போம் என்ற ஆசை எல்லார் மனதிலும் இருக்கும். ஆனால் பலருக்கும் அந்த ஆசை கனவாகவே முடிந்துவிடும். பிரிட்டனைச் சேர்ந்த ஜேமி மெக்டொனால்ட் அந்த கனவை நிஜமாக்கியுள்ளார், அதுவும் கின்னஸ் சாதனையோடு. ஏழு உலக அதிசயங்களையும் காண ஜேமி எடுத்துக்கொண்ட நேரம் எவ்வுளவு தெரியுமா? வெறும் ஆறு நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்கள். இணையத்தில் ‘அட்வெஞ்சர்மேன்’ என அறியப்படும் ஜேமி, டிராவல்போர்ட் என்ற சுற்றுலா தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியோடு இந்த சாகச பயணத்தை நிறைவு செய்துள்ளார். தற்போது கின்னஸ் உலக சாதனையின் அங்கீகாரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

தனது சாகச பயணம் பற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் ஜேமி. ஏழு அதிசயங்களைக் காண நான்கு கண்டங்களை கடந்து பயணம் செய்துள்ளார் இந்த சாகசப் பிரியர். ஒட்டுமொத்தத்தில் ஒன்பது நாட்டில் கால் பதித்து, 13 விமானம், 9 பேருந்து, 4 ரயில், 16 டாக்ஸி மற்றும் பனி சறுக்கு வாகனம் என 22,856 கிமீ பயணம் செய்துள்ளார். இச்சாதனைப் பயணத்தின் முதல் அடியாக அவர் சென்றது சீனப் பெருஞ்சுவர். அங்கிருந்து தாஜ்மஹால், அதன்பிறகு ஜோர்டானின் பெத்ரா, அங்கிருந்து ரோமில் இருக்கும் கொலோசியம் கட்டிடம். கடைசி கட்ட பயணமாக தென் அமெரிக்கா சென்றார் ஜேமி.

அங்கு பிரேசிலில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் சிலை, பெருவில் உள்ள மச்சு பிச்சு, இறுதியாக மெக்சிகோவில் உள்ள சிச்சென் இட்சாவோடு தனது சாகச பயணத்தை நிறைவு செய்தார்.நொடிப் பொழுது தாமதமாகியிருந்தால் கூட டெல்லியில் ரயிலை தவற விட்டிருப்பது, ரோமிலிருந்து ரியோவிற்குச் செல்ல விமான நிலையத்திற்கு தாமதமாக சென்றது என இந்த கின்னஸ் உலக சாதனை முயற்சியில் சில தடங்கல்களும் இல்லாமல் இல்லை. “ரெடி. ஸ்டெடி. கோ, கின்னஸ் சாதனைக்காக” என தனது வீடியோவிற்கு தலைப்பிட்டுள்ளார் ஜேமி. இந்த வீடியோவைப் பார்த்து ஜேமி மெக்டொனால்டின் ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளார்கள். “அற்புதம், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! கூல்” என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

Read More : 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை கசந்தது.. தன்னைவிட 18 வயது இளையவரை கரம் பிடித்த பெண்

“வாவ்! ஒரே சமயத்தில் கிறுக்குத்தனமும் காவியத்தன்மையும் கொண்டது இது” என ஒருவர் பலரையும் இந்த வீடியோ வசீகரித்துள்ளது. “நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் ஈடுபாடு கொண்டு ரசித்து பார்த்த வீடியோக்களில் ஒன்று இது” என ஒருவர் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஹீரோ அறக்கட்டளை என்ற நிறுவனம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு நிதி திரட்டவே இந்த சாகசப் பயணத்தை செய்துள்ளார் ஜேமி.




 




View this post on Instagram





 

A post shared by Jamie McDonald (@adventureman)



தன்னுடைய குழந்தைப் பருவத்தில் சிரிங்கோமா என்ற அரிதான ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜேமி, கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் திறனை இழந்துவிடுவார் என டாக்டர்கள் அவரது குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர். ஆனால் தனது ஒன்பது வயதிலேயே மருத்துவர்களின் உதவியால் தனது உடல்நிலையை மேம்படுத்திக் கொண்டார் ஜேமி. இந்த பயணத்தில் ஏழு அதிசியங்களையும் சுற்றிப்பார்க்க கொஞ்ச நேரமே இருந்தது என்றாலும், காஃபி அருந்துவது போன்ற ஒரு கிளர்ச்சியை இது தந்தது என்கிறார் இந்த சாகசப்பிரியர்.

top videos

    தன்னுடைய இதயத்தில் தாஜ்மஹாலுக்கு என்றும் நீங்காத இடம் உண்டு எனக் கூறும் ஜேமி, “தாஜ்மஹாலை நேரில் பார்த்த போது நான் அழுதுவிட்டேன். இதற்கு முன்பு எந்த கட்டிடத்தையும் பார்த்து நான் அழுததில்லை. அவ்வளவு அழகாக இருந்தது தாஜ்மஹால்” என்கிறார்.ஏழு உலக அதிசயங்களுக்கும் ஒரு வாரத்திற்குள் பயணம் செய்து சாதனை படைப்பது இது முதல்முறை அல்ல. 2019ம் ஆண்டு, யூடியூபர் சைமன் வில்சன் ஆறு நாள், ஒன்பது மணி நேரம், மூன்று நிமிடங்களில் ஏழு அதிசியங்களுக்கும் சென்று வந்தார்.

    First published:

    Tags: Trending, Viral