முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / விண்ணில் ராக்கெட் ஏவப்படுவதை படம் பிடித்த நபர்... விமான பயணத்தின் போது நடந்த சம்பவம்..

விண்ணில் ராக்கெட் ஏவப்படுவதை படம் பிடித்த நபர்... விமான பயணத்தின் போது நடந்த சம்பவம்..

ராக்கெட் ஏவப்படும் காட்சி..

ராக்கெட் ஏவப்படும் காட்சி..

மிகவும் அழகான காட்சிகளை பார்க்கும்போது விமானத்தில் பயணம் செய்யும் சிலர் தங்களது கேமரா மூலம் அவற்றை படம் பிடித்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் அனைவருக்கும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கும். மேலும் அடிக்கடி விமான பயணம் செய்பவர்களாக இருப்பின் விமானத்தின் ஜன்னலிற்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து அந்த அழகான ரம்மியமான காட்சியை காண்பதே ஒரு பெரும் நிம்மதியை கொடுக்கும். பெருங்கடல்கள், உயர்ந்த மலைத் தொடர்கள், மேகங்கள், அழகிய வானம், அடுக்கடுக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் போன்ற பல்வேறு காட்சிகளையும் விமானத்தின் ஜன்னல் இருக்கையில் இருந்து நம்மால் கண்டுகளிக்க முடியும்.

அது போன்ற சமயங்களில் மிகவும் அழகான காட்சிகளை பார்க்கும்போது விமானத்தில் பயணம் செய்யும் சிலர் தங்களது கேமரா மூலம் அவற்றை படம் பிடித்துக் கொள்வதும் மிகவும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் இங்கு ஒரு விமான பயணி இது போன்ற காட்சிகளை அல்லாமல், முற்றிலும் வித்தியாசமான காட்சி ஒன்றை விமானத்தில் பயணம் செய்யும்போது படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் மிகப் பெரும் அளவில் வைரலாகி வருகிறது.@plane.focus என்ற இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் ஒரு வீடியோவானது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் @chefinkpr என்பவர் தன்னுடைய டிக்டாக் வலைப்பக்கத்தில் அதே வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் விமானத்தில் பயணிக்கும் அந்த நபர், ஜன்னல் வழியாக வெளியே நடக்கும் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டே வருகிறார். அந்த சமயத்தில் அருகே உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் ஒன்று ஏவப்படுகிறது. இதைப் பார்த்த அவர் உற்சாகத்தில் உறக்க கத்துவதும், அருகே உள்ள பயணிகளும் ஆர்வத்துடன் அதை பார்த்து கத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தரையில் இருந்து ராக்கெட் கிளம்பி வேகமாக விண்ணை நோக்கி பாய்ந்து செல்கிறது.

Read More : 58 வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட மாமியார்... விசித்திரமான புகாரை அளித்த மருமகள்...!

சாதாரணமாக ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிகழ்வை தரையில் இருந்து பார்ப்பதை விட விமானத்தில் பயணித்துக் கொண்டே உயரத்திலிருந்து ராக்கெட் விண்ணை நோக்கி சீறிபாய்வதை அதை பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளது. மேலும் எவ்வாறு வானத்தில் மேகக் கூட்டங்கள் காணப்படுமோ, அது போலவே ராக்கெட் ஏவப்பட்ட இடத்தில் ராக்கெட்டில் இருந்து வெளியிடப்பட்ட புகையானது மிகவும் அடர்த்தியாக தரையில் இருக்கும் மேகம் போல காட்சியளிக்கிறது.இந்த வீடியோ பதிவிட்டதிலிருந்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் ஒரு பார்க்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த அழகிய காட்சியை பார்த்துவிட்டு அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  வீடியோவை பதிவிட்ட அந்த நபர் “விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ராக்கெட் ஏவுதலை கண்ட அந்த தருணம்” என்ற வாசகங்களை வீடியோவின் மேல் பகுதியில் சேர்த்துள்ளார்.

top videos

    அதனைக் கிண்டல் செய்யும் விதமாக ஒருவர் “வாசகங்களை இணைத்ததற்கு நன்றி. ராக்கெட் ஏவுதலின் பாதி பகுதியை நீங்கள் சேர்த்த வாசகங்களே மறைத்து விட்டன” என்று விளையாட்டாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மற்றொருவரோ “அடுத்தபடியாக ராக்கெட் உங்களது விமானத்தை நோக்கி சீறிப் பாய்கிறது” என்று திகிலான கருத்தை பதிவு செய்துள்ளளார்.

    First published:

    Tags: Trending, Viral