முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / விவாகரத்தை கொண்டாட சென்றவருக்கு நேர்ந்த சோகம்... 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து காயம்..!

விவாகரத்தை கொண்டாட சென்றவருக்கு நேர்ந்த சோகம்... 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து காயம்..!

பஞ்சி ஜம்பிங்

பஞ்சி ஜம்பிங்

விவாகரத்தை கொண்டாடுவதற்காக பஞ்சி ஜம்பிங் சென்ற ஒருவர் கயிறு அறுந்ததால், 70 அடி உயரத்தில் இருந்து விழுந்து கழுத்தில் பலத்த காயத்துடன் திரும்பினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஃபேல் டோஸ் சாண்டோஸ் டோஸ்டா என்ற 22 வயதான இளைஞர், இந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி பிரிட்ஜ் ஸ்விங்கில் பங்கேற்பதற்காக பிரேசிலில் உள்ள கேம்போ மாக்ரோவுக்குச் சென்றார். அப்போது கயிறு அறுந்ததால் காயங்களுடன் திரும்பினார். விபத்திலிருந்து தப்பிய ரஃபேல், "நான் எப்போதும் மிகவும் அமைதியான நபராக இருப்பேன். ஆனால் சமீபத்தில் நிலைமை மாறிவிட்டது" என்று  ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

"அன்றைய தினம், நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தேன். விவாகரத்துக்குப் பிறகு, நான் எல்லா வகையிலும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினேன். நிறைய க்ரேஸியான விஷயங்களைச் செய்து கொண்டிருந்தேன். என் வாழ்க்கையின் மதிப்பு அப்போது தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

கயிறு அறுந்து தண்ணீரில் மூழ்கிய பிறகு, அவரைச் சூழ்ந்துக் கொண்ட ஒரு கூட்டம், அவரை நகர வேண்டாம் என்றும் உதவி செய்ய ஆட்கள் வந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்களாம்.

இதையும் படிங்க; பிகினியில் சொக்க வைக்கும் நடிகை வாணி கபூர்!

"விழுந்ததும், நான் எழுந்து நிற்க முயற்சித்தபோது, மிகவும் அதிகமான வலியை உணர்ந்தேன். என் வாழ்க்கையில் இதைவிட மோசமான வலியை நான் உணர்ந்ததில்லை" என்ற ரஃபேல், கீழே குதித்து உயிர் பிழைத்ததில் நன்றியுடன் இருப்பதாகக் கூறினார்.

"நீங்கள் வாழ்க்கையை வலியில் இருந்து தான் உணர தொடங்குகிறீர்கள், எல்லாவற்றிற்கும் நன்றியுடன் இருக்க வேண்டும். நான் முன்பு இந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை. என் வாழ்க்கை ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது. நான் உயிருடன் இருப்பதற்கு நன்றி சொல்ல வேண்டும், இது மிகப் பெரிய விஷயம்” என்றார்.

"எனது தூக்கம் ஒரே மாதிரியாக இல்லை. என்னால் தூங்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியிருந்தது. எனக்கு விதவிதமான கனவுகள் தோன்ற ஆரம்பித்தன, இதனால் தூங்குவதற்கு பயப்படுகிறேன். நாம் வலிமையானவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் உங்களிடம் ஒரு ஸ்பெஷலிஸ்ட் அல்லது ஒளி இருந்தால், தனியாக எழுந்திருக்க முயற்சிப்பதை விட மிகவும் சிறந்தது" என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Divorce