முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இத்தனை லட்சமா? மறைந்த சகோதரரின் பழைய வாட்ச்சின் உண்மையான விலையை கேட்டு அதிர்ந்து போன பெரியவர்!

இத்தனை லட்சமா? மறைந்த சகோதரரின் பழைய வாட்ச்சின் உண்மையான விலையை கேட்டு அதிர்ந்து போன பெரியவர்!

The vintage timepiece was bought for £300

The vintage timepiece was bought for £300

1975 Omega Speedmaster | சில பொருட்களின் மதிப்பு வாங்கும் போது நமக்கு தெரியாது. பழைய பொருட்கள் என குப்பையில் போட்டு இருப்போம். ஆனால் அதுதான் பல லட்சம் மதிப்புடையதாக இருக்கும். அப்படிதான் பெரியவர் ஒருவருக்கு நடந்துள்ளது

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சில பொருட்களின் மதிப்பு வாங்கும் போது நமக்கு தெரியாது. பழைய பொருட்கள் என குப்பையில் போட்டு இருப்போம். ஆனால் அதுதான் பல லட்சம் மதிப்புடையதாக இருக்கும். அப்படிதான் பெரியவர் ஒருவருக்கு நடந்துள்ளது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய மூத்த சகோதரன் (இப்போது அவர் உயிருடன் இல்லை) வாங்கிய வாட்ச்சின் தற்போதைய மதிப்பைக் கேட்டு ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி போயிருக்கிறார் பெரியவர் ஒருவர். கார் விபத்தில் தன்னுடைய சகோதரன் இறந்த பிறகு, எப்படி அந்த வாட்ச் தன்னிடம் வந்தது என்பதை பிபிசி நடத்திய பழங்கால பொருட்களின் ரோட்ஷோ (Antiques Roadshow) நிகழ்ச்சியில் விளக்கமாக கூறியுள்ளார்.

1980 ஆம் ஆண்டு 300 பவுண்டிற்கு (இன்றைய மதிப்பில் 30,000 ரூபாய்) வாட்ச் வாங்கப்பட்டுள்ளது. அந்த வாட்ச் வாங்கிய கொஞ்ச நாட்களிலேயே அதன் உரிமையாளர் இறந்து போய்விட்டார். அதன்பிறகு அந்த வாட்ச், அவரின் இளைய சகோதரரின் கைக்கு வந்தது. ஆனால் அவரோ அந்த வாட்ச்சை பயன்படுத்தவே இல்லை.

“இது எனக்கேற்ற வாட்ச் அல்ல. இது பெரியதாகவும், எடை அதிகமாகவும் இருந்தது. ஆகையால் இதை ஒருநாள் கூட நான் பயன்படுத்தவில்லை. எப்போதாவது உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், அதை அப்படியே என்னுடைய மேஜை டிராயரில் போட்டு பூட்டி வைத்தேன்” என நினவுகூர்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் முப்பது ஆண்டுகளாக அந்த வாட்ச், மேஜை டிராயரில் தூங்கிக் கொண்டிருந்தது. அதன் உண்மையான மதிப்பு இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

தனக்கேற்ற வாட்ச் இல்லை என்பதற்காக அதை அவர் தொலைக்கவில்லை; யாருக்கும் கொடுக்கவும் இல்லை. அதை அப்படியே பத்திரமாக பூட்டி வைத்திருந்தார். பிபிசி நடத்திய பழங்கால பொருட்களின் ரோட்ஷோ நிகழ்ச்சியில் இந்த வாட்ச்சின் முழு விவரமும் தெரிய வந்தது.

இந்த வாட்சின் பெயர் ஒமேகா ஸ்பீட்மாஸ்டர் அப்பல்லோ-சோயுஸ் (Omega Speedmaster Apollo-Soyuz). 1975ம் ஆண்டு மூன்று அமெரிக்க மற்றும் இரண்டு சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சந்தித்து கொண்டதை நினைவுகூரும் விதமாக இந்த வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறப்பு வாய்ந்த இந்த வாட்ச், 400 முதல் 500 வரையிலான எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

Also Read | இயர்பட்ஸ் யூஸ் பண்ணா இப்படி ஒரு நோயா? 18 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

இந்த வாட்ச் வாங்கியதற்கான பில் மற்றும் இதர ஆதாரங்களை காண்பித்ததும், இது பழங்கால வாட்ச் என்பது உறுதியானது. இந்த வாட்ச்சை அந்த முதியவர் விற்க முடிவு செய்தால், அவருக்கு குறைந்தது 81 லட்ச ரூபாய் கிடைக்கும் என ஏலதாரர் கூறுகிறார். “அட, நான் நினைத்ததை விட இது அதிகமாக இருக்கிறதே” என ஆச்சர்யப்படுகிறார் முதியவர்.

இதற்கு முன்பு இதேப்போன்று 7000 ரூபாய்க்கு வாங்கிய பழையகால வாட்ச், 41 லட்சத்திற்கு ஏலம் போனது. ஒமேகா ஸ்பீட்மாஸ்டர் அப்பல்லோ-சோயுஸ் (Omega Speedmaster Apollo-Soyuz) வாட்ச்சைப் போலவே, இந்த ரோலஸ் சப்மரினர் (Rolex Submariner) வாட்ச்சும் பழங்கால பொருட்களின் ரோட்ஷோவில் தான் மதிப்பிடப்பட்டது. சைமன் பார்னெட் என்பவரே இந்த வாட்ச்சின் உரிமையாளர். இவர் ராயல் கப்பற்படையில் தேடுதல் மற்றும் மீட்புபணி ஓட்டுனராக பணிபுரிந்துள்ளார்.

2019ம் ஆண்டு இவர் இறந்ததும், இந்த வாட்ச் அவரது மகனிடம் வந்தது. இவரது தந்தை, 1964ம் ஆண்டு, சிங்கப்பூரில் பணியாற்றி கொண்டிருக்கும் போது இந்த வாட்ச்சை வாங்கியுள்ளார். இந்த கப்பற்படை அதிகாரி இந்த ரோலஸ் வாட்ச்சை வெறும் பேஷன் பொருளாக பாவிக்காமல், மீட்புபணியின் போதும் இதை அணிந்தே போயுள்ளார். இந்த வாட்ச்சை 23 ஆண்டுகள் பயன்படுத்தியுள்ளார் சைமன்.

உங்கள் பாட்டி, தாத்தா வாங்கிய பொருள் ஏதாவது உங்கள் மேஜை டிராயரில் இருக்கிறதா? உடனே போய் பாருங்கள். யாருக்குத் தெரியும், அதன் இன்றைய மதிப்பு பல லட்சமாக கூட இருக்கலாம்.

First published:

Tags: Technology, Viral News, Viral Video