முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கல்லுக்குள் கிடைத்த 2.5 கிலோ தங்கம்.. ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன நபர்!

கல்லுக்குள் கிடைத்த 2.5 கிலோ தங்கம்.. ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன நபர்!

தங்க வேட்டையில் கிடைத்த தங்கம்..!

தங்க வேட்டையில் கிடைத்த தங்கம்..!

தங்கம் தேடி புறப்பட்ட வெகு சிலருக்கு தங்க துகள்கள் அடங்கிய கைப்பிடியளவு மண் வேண்டுமானால் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், கிலோ கணக்கில், இல்லையில்லை பவுன் கணக்கில் கூட தங்கம் கிடைத்திருக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்க, வைரம் போன்ற விலை மதிப்புமிக்க பொருட்கள் இருப்பதாகக் கூறப்படும் ரகசிய இடங்களை தேடி ஹீரோ, ஹீரோயின் பயணம் செல்வதைப் போன்ற எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். நிஜத்திலும் அப்படி நடக்குமா என்றால், கோலார் தங்க வயல் சுரங்கத்தை சுற்றியிலும் உள்ள கிராம மக்கள் இதேபோன்ற தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுவது உண்டு.

தங்கம் தேடி புறப்பட்ட வெகு சிலருக்கு தங்க துகள்கள் அடங்கிய கைப்பிடியளவு மண் வேண்டுமானால் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், கிலோ கணக்கில், இல்லையில்லை பவுன் கணக்கில் கூட தங்கம் கிடைத்திருக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்திலும் ‘கோல்டன் முக்கோணம்’ என்று சொல்லக் கூடிய தங்க தாதுக்கள் கொண்ட மலைப்பகுதி இருக்கிறதாம். அங்கும், மக்கள் தங்க வேட்டைக்கு செல்கிறேன் என்ற பெயரில் புறப்பட்டுச் சென்று பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புவது வாடிக்கையாக இருக்கிறது.

கல் பாறை லேசாக மஞ்சள் நிறத்தில் இருந்து விட்டால் போதும். உடனே அதை தங்கக் கட்டி என்று நினைத்து சுமந்து கொண்டு வந்து ஏமாந்தவர்களும் உண்டு. இப்பகுதியை ஒட்டிய இடத்தில் ‘லக்கி கோல்டு ஸ்டிரைக்’ என்ற பெயரில் தங்க நகைக்கடை இயங்கி வருகிறது. அங்கு மக்கள் தங்க வேட்டைக்கு செல்ல உதவிடும் வகையில் மெட்டல் டிடெக்டர்கள் வேறு விற்பனை செய்யப்படுகிறதாம்.ரொம்ப அதிகமில்லை, ஒரு தங்க டிடெக்டரின் விலை இந்திய மதிப்புக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே. இந்த விலைக்கு இன்றைய மதிப்பின்படி குறைந்தபட்சம் 10 கிராம் தங்கம் வாங்கிவிட முடியும் என்பது வேறுகதை. ஆனால், பெரும் ஆசையோடு இந்த டிடெக்டரை வாங்கிச் செல்கின்ற மக்கள் யாருக்கும் பெரிய அளவில் தங்கம் கிடைக்கவில்லை.

Read More : ” சாலையை கடக்கும்போதும் செல்போன்... அப்புறம் கார் ஏறிடுது..! ” - மொபைல்போன் உருவாக்கிய பொறியாளர் கவலை..!

விடாமுயற்சியும், வெற்றியும் : லக்கி கோல்டு ஸ்டிரைக் கடையில் இருந்து டிடெக்டரை வாங்கிச் சென்ற ஒருவர் விடாமுயற்சியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். இறுதியாக, 4.6 கிலோ எடை கொண்ட கல் ஒன்றை கண்டறிந்தார். கடுமையான தூசு நிரம்பிய அந்த கல்லில் மிக குறைவாக தங்கம் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் அதை கடைக்கு கொண்டு வந்தார். மேலும், இது ஒரு 5 லட்சத்திற்கு விலை போகுமா என்றும் கேட்டிருக்கிறார்.

ஆனால், தங்க விற்பனை தொழிலில் 40 வருடம் அனுபவம் கொண்ட கடை உரிமையாளர் தரேன் காம்ப், அந்த கல்-ஐ ஆய்வு செய்ய தொடங்கினார். அப்போது தன் வாழ்நாளில் இதுவரை பார்த்திராத அளவுக்கு பசுந்தங்க கட்டி ஒன்று அந்த கல்லின் உட்புற பகுதியில் இருப்பது அவருக்கு தெரியவந்தது. தங்கத்தை பிரித்து எடை வைத்து பார்த்ததில் 2.6 கிலோ இருந்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டு டாலர் மதிப்பின் படி இதன் மதிப்பு 2.40 லட்சம் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பின்படி ரூ.1.3 கோடி ஆகும்.

இந்த செய்திதான் தற்போது அங்கு எல்லோரிடமும் பேசு பொருளாக உள்ளது.

First published:

Tags: Trending, Viral