முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / வயதாகாமல் இருக்க இப்படி ஒரு ஐடியா.. 16 கோடி ரூபாய் செலவிட்டு மகனின் ரத்தத்தை செலுத்திக்கொள்ளும் தந்தை!

வயதாகாமல் இருக்க இப்படி ஒரு ஐடியா.. 16 கோடி ரூபாய் செலவிட்டு மகனின் ரத்தத்தை செலுத்திக்கொள்ளும் தந்தை!

உடலில் ரத்தம் ஏற்றும் நபர்

உடலில் ரத்தம் ஏற்றும் நபர்

அறிவியலின் வளர்ச்சி என்பது கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றே. அந்த வகையில் பல்வேறு மாற்றங்கள் அறிவியலால் ஏற்பட்டு வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அறிவியலின் வளர்ச்சி என்பது கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றே. அந்த வகையில் பல்வேறு மாற்றங்கள் அறிவியலால் ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் அறிவியலின் கண்டுபிடிப்புகள் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடும்.

அப்படியொரு நிகழ்வு தான், 45 வயதான ஒருவருக்கு ஏற்பட்டு உள்ளது. இவர் தனக்கு வயதாக கூடாது என்பதற்காக அறிவியலின் துணைகொண்டு ஒரு வியக்கத்தக்க காரியத்தை செய்துள்ளார்.

பொதுவாக அறிவியலின் உதவியுடன் பல்வேறு விஷயங்களை நாம் சாத்தியப்படுத்த முடியும். அந்த வகையில், வயதாவதை தடுக்க, மிகவும் இளமையாக இருக்கவும் 45 வயதான தொழிலதிபரான பிரயான் ஜான்சன் என்பவர் அறிவியலை பயன்படுத்தி உள்ளார். விஞ்ஞானத்தால் எதுவும் சாத்தியம் என்பதையும் இதன்மூலம் உணர முடிகிறது. ஆம், இவர் தனது உடலில் வயதாகும் செயல்பாட்டை குறைக்கவும், உடல் இளமையாகவும், வடிவமாகவும் இருக்க தனது 17 வயதான மகனின் இரத்தத்தை தனது உடலுக்கு செலுத்தி உள்ளார்.

பெரும்பாலும், நம்மில் பலர் இளமையாக இருக்க பலவிதமான உடற்பயிற்சிகளை கடுமையாக பின்பற்றி வருவார்கள். ஆனால், பிரயான் அவர்கள் பயோடெக்னாலஜியில் முன்னேறிய ஒரு தொழில்நுட்பத்தின் உதவியுடன் வயதாகும் செயல்முறையை தடுத்துள்ளார். ஆனால், இந்த செயல்முறைக்கு ஆண்டுக்கு $2 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 16 கோடி) வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவ செயல்முறையை தான் தற்போது 45 வயதான பிரயான் மேற்கொண்டு வருகிறார். இப்படி செய்து வருவதன் மூலம், 17 வயதுடையோரின் உடல் உறுதியையும், நுரையீரல் திறனையும், 37 வயதுடையோரின் இதய வேகத்தையும், 28 வயதுடையோரின் தோலையும் இவரால் பெற முடியுமாம்.

ஆனால், இது போன்ற விலை உயர்ந்த மருத்துவ செயல்முறைகளுக்கு கோடி கணக்கில் செலவு ஆகும் என்பதால், பெரும் செல்வந்தர்கள் மட்டுமே இதற்கு பணம் செலவிட முடியும். பிரயான் ஜான்சன் மிக வசதியான மென்பொருள் தொழிலதிபர் என்பதால், சுமார் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களிடம் இருந்து இந்த மருத்துவ சிகிச்சையை பெற்று வருகிறார். இந்த நவீன செயல்முறையின் மூலம் பிரயானின் உறுப்புகளை முதுமை அடைவதைத் தடுக்க முடியும் என்று உறுதி அளித்துள்ளனர்.

பிரயானுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுக்கள் தங்களால் இயன்ற வரையில் இவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும், இதன் மூலம் மிகவும் இளமையாகவும் உறுதியாகவும் அவரின் உடலை மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்று உறுதி அளித்துள்ளனர். மேலும், இந்த மருத்துவ குழுவினர் நீண்ட ஆயுட்காலம் பற்றியும், முதுமை பற்றிய அறிவியல் ஆராய்ச்சியையும் பல ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் செய்து வருகின்றனர். வரும்காலங்களில் இது போன்ற சிகிச்சை முறைகள், எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Viral News