அமெரிக்காவைச் சேர்ந்த கலேப் ஹாங் என்ற இளைஞருக்கு தன்னுடைய 18 ஆவது பிறந்த நாளில் லாட்டரி மூலமாக அதிர்ஷ்டம் அவரைத் தேடி வந்தது. ஆம், லாட்டரியில் அவர் 8.2 கோடி வென்று கோடீஸ்வரன் ஆகி உள்ளார். பொதுவாக 18 வயதை அடைந்தால் தான் சட்ட ரீதியாக லாட்டரி டிக்கட் வாங்க முடியும். இவரோ அதற்கேற்றார் போல், சரியாக 18 வயதை அடைந்த உடனேயே, லாட்டரி மூலம் கோடி கணக்கில் வென்றுள்ளார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த லாட்டரி டிக்கட்டை கலேப் ஹாங் வாங்கவில்லை என்பது தான்.
பின்னர் எப்படி லாட்டரியில் 8.2 கோடி வெல்ல முடியும் என்று நீங்கள் சிந்திக்கலாம்? அவருக்கு இந்த லாட்டரி டிக்கட் பிறந்த நாள் பரிசாக வந்துள்ளது. 18 வயதை அடைந்ததை உணர்த்த மற்றும் கொண்டாட அவர் பாட்டி தான் அவருக்கு அந்த லாட்டரியை பரிசாக கொடுத்து உள்ளார்.தன் தாயுடன் மீன் பிடிக்க செல்லும் வழியில் தான் கலேப் லாட்டரியை சுரண்டி, தான் பரிசு வென்றிருப்பதை அறிந்து கொண்டார். அவரிடம் இது பற்றி கேட்ட போது, அவர், "எனக்கே இது ஆச்சரியமாகத் தான் உள்ளது. எனக்கு லாட்டரியில் பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. நானும் என் அம்மாவும் மீன் பிடிக்க காரில் சென்று கொண்டு இருந்தோம்.
அப்போது வழியில் தான் நான் லாட்டரியைச் சுரண்டிப் பார்த்தேன். காரை சற்று நிறுத்திய பின்னர் தான், எங்களால் பரிசு வென்றிருப்பதை உணர முடிந்தது. அதுவும் 1 மில்லியன் டாலர்! நாங்கள் இதனை எல்லாம் நினத்துக் கூட பார்த்தது இல்லை." என்று கூறினார்.மீன் பிடிக்க சென்றதால், கலேப் தன்னுடைய அடையாள அட்டையை அப்பொழுது வைத்திருக்கவில்லை. அதனால் வீட்டிற்குச் சென்று அதனை எடுத்துக் கொண்டு அவர் பணத்தைப் பெற்றுக் கொள்ள சென்றதாக கூறினார்.உண்மையில், இது தான் சரியான ஒரு பிறந்தநாள் பரிசு.
Read More : ஆஸ்துமாவால் தொடங்கிய பயணம்.. 100 ஆண்டுகளுக்கு மேலாக பியானோ வாசிக்கும் பெண்!!!
இதனை அவருடைய பாட்டி டர்லாக்கில் உள்ள ஒயாஸிஸ் மார்க்கெட்டில் வாங்கி உள்ளார்.இதனை வைத்து நீங்கள் என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள் என்று கேட்ட போது, அதற்கு அவர் லாட்டரியில் வென்ற பணத்தை வைத்து தன்னுடைய கல்லூரி கட்டணங்களை செலுத்திவிட்டு மீதம் உள்ள பணத்தை தன் எதிர்காலத்தில் முதலீடு செய்யப் போவதாகக் கூறினார்.
இது போன்ற ஒரு சம்பவம் புளோரிடாவிலும் நடந்துள்ளது. புளோரிடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளின் புற்றுநோய் சிகிச்சை முடிந்த இரண்டே நாட்களில், லாட்டரி மூலம் $2 மில்லியன் (தோராயமாக ரூ. 16.41 கோடி) கிடைத்துள்ளது.
அவருடைய பெயர் ஜெரால்டின் கிம்ப்லெட். அவர் தனது மகளுக்கு ஆகும் மருத்துவமனை செலவுகளை சமாளிக்க தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ளார். ஆனால், அதிர்ஷடவசமாக அவருக்கு லாட்டரியால் கோடீஸ்வரி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. புளோரிடா லாட்டரி தலைமையகத்தில் தனது மகள் மற்றும் பேத்தியுடன் இணைந்து கிம்ப்லெட் லாட்டரி மூலம் வென்ற காசோலையை வைத்திருக்கும் புகைப்படங்களுடன் அவரது கதை ட்விட்டரில் வைரலாக பரவியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.