சிங்கம் என்றாலே காட்டின் ராஜா என்பது நம்முள் பலரின் மனதில் பதிந்திருக்கும் ஒன்று. தைரியத்திற்கும் வீரத்திற்கும் கூட சிங்கத்தினை நாம் உவமையாக பயன்படுத்துவது உண்டு. இப்படி காட்டின் ராஜாவாக சுற்றிவரும் சிங்கத்திடம் நெருங்குவதற்கு பல விலங்குகள் சற்று யோசிக்கத்தான் செய்யும். ஆனால் இங்கு சிங்கத்தையே ஒரு குட்டி பயமுறுத்தி உள்ளது. அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது.
பொதுவாக விலங்குகளின் சேட்டைகள் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதும் வைரலாவதும் இயல்பான ஒன்று தான். ஆக்ரோஷமான விலங்குகளின் குறும்பு வேலைகளும் அமைதியென நாம் நினைக்கும் விலங்குகள் திடீரென கோபப்படும் வீடியோக்களும் கூட நம்மில் பலர் பார்த்திருப்போம். அப்படித்தான் இங்கு ஒரு சிங்கம் பயந்து இருக்கிறது. அதுவும் தன்னைவிட சிறிய உருவத்தை பார்த்து அந்த சிங்கம் பயப்படுவது தான் இன்னும் சுவாரஸ்யமான விஷயம்.
சிங்கம் ஒன்று ஜாலியாக ஒரு பாறையின் முன் படுத்து இருக்கிறது. அதற்கு பின்னால் இருந்து குட்டி சிங்கம் ஒன்று ஹாயாக நடந்து வருகிறது. இதனை சற்றும் எதிர்பாராத சிங்கம் சட்டென்று பயந்து அதனை பார்த்து சீறிக்கொண்டு எழத்தொடங்குகிறது. குட்டி சிங்கம் ஒரு ஜர்க்குடன் முன்னோக்கி வந்து அதன் பின்னால் வரும் பெண் சிங்கத்திடம் முறையிடுவது போல போய் உராசிக்கொள்கிறது.
Read More : சென்னையில் மின்சார ரயிலில் கத்தியை தீட்டியபடி கல்லூரி மாணவர்கள் ரகளை
என்னதான் காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் எதிர்பாரதா நேரத்தில் வந்தா பயமா இருக்குமா இல்லையா என்பது போல அந்த ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை பார்க்கிறது. வெறும் 20 நொடிகளே இருக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை லைக் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
கமெண்டுகளிலும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர் சிங்கம் கூட பயப்படும் என்பதை நான் இப்போது தான் தெரிந்து கொண்டேன் என்றும், மற்றொருவர் இந்த முழு வீடியோவிற்கும் காமெடியாக தனது சொந்த வசனத்தை எழுதியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.