இந்தியாவில் தற்போது பல வகையான உணவு வகைகள் உள்ளன. உணவு வகைகளைப் பொறுத்த வரை அதற்கு எல்லையே இல்லை என்றும் கூட சொல்லலாம். ஆம், இட்லி, தோசை, பூரி, சேமியா, உப்புமா என்று ஏகப்பட்ட வகைகள் உள்ளன. தென் இந்திய உணவு என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது இட்லி தான்.
பெரும்பாலானவர்கள் இட்லியை காலை உணவாக சாப்பிடுவதை வழக்கமாகவே ஆக்கிவிட்டனர். இட்லியிலும் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ரவா இட்லி. இதற்கும் இரண்டாம் உலகப் போருக்கும் என்ன சம்மந்தம்? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
MTR என்று தற்போது பிரபலமாக அறியப்படும் பிராண்ட் ஆன மாவல்லி டிபன் ரூம், பரம்பள்ளி யக்ஞநாரியானா மையா மற்றும் அவரது சகோதரர்களால் 1924 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் MTR பெங்களூரில் ரவா இட்லியை ஒரு பிரபலமான காலை உணவாக உருவாக்கியது. இதுவும் ஒரு வகையான இட்லி என்றாலும் கூட, இது மற்ற இட்லியைப் போல அரிசி மாவால் ஆனது அல்ல. இதன் பெயர் குறிப்பிடுவது போல இது ரவை கொண்டு செய்யபப்டும் ஒரு உணவு வகையாகும். இது நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லியை விட ஆரோக்கியமானது என்றும் சொல்லலாம்.
சரி விஷயத்திற்கு வருவோம். இரண்டாம் உலகப் போரின் போது, மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளரான பர்மா மீது ஜப்பான் படையெடுத்து தாக்கியதால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதோடு அதன் விலையும் உயர்ந்தது.
அரிசி சார்ந்த உணவுகளையே விரும்பி உண்ணும் தென் இந்திய மக்களிடத்தில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அரிசி இல்லாமல் இட்லி செய்ய முடியுமா என்று மாற்று வழிகளை யோசிக்க ஆரம்பித்து விட்டனர். இந்தத் தட்டுப்பாடு MTR நிறுவனத்தின் வணிகத்தையும் பெரிதும் பாதித்தது. இதன் விளைவாக வந்ததே ரவா இட்லி. ஆம், தங்கள் வணிகத்தை தூக்கி நிறுத்தும் வகையில், MTR சகோதரரர்கள் அரசி இல்லாமல் ரவையைக் கொண்டு செய்யப்படும் ரவா இட்லியை கண்டுபிடித்தனர்.
MTR இன் மேனேஜிங் பார்ட்னர் ஆன விக்ரம் மையா அவர்கள், தி ஹிந்து பத்திரக்கைக்கு அளித்த பேட்டியில், தனது மாமாவான யக்னநாராயண மையா தான் தற்போது மக்கள் இதயங்களை வென்ற ரவா இட்லியின் செய்முறையை உருவாக்கியவர் என்று தெரிவித்தார். நீங்கள் MTR இன் ரவா இட்லியை முயற்சி செய்து பார்த்துள்ளேர்களா? அப்படி என்றால், அதன் சுவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட மறவாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.