முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / “கர்நாடகாவின் அடுத்த முதல்வர் இவர்தான்...”- குமாரசாமி படத்தை கவ்வி எடுத்த காலபைரவர் நாய்..!

“கர்நாடகாவின் அடுத்த முதல்வர் இவர்தான்...”- குமாரசாமி படத்தை கவ்வி எடுத்த காலபைரவர் நாய்..!

நாய் கணிப்பு

நாய் கணிப்பு

கர்நாடகா தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்று நாய் ஒன்று கணித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்கிற கணிப்பு பலரையும் ஆட்டிப்படைக்க, ஹெச்.டி குமாரசாமி தான் அடுத்த முதல்வர் என கணித்து நாய் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்துக்கு உட்பட்ட அசோக் நகரைச் சேர்ந்த கோபி என்பவருக்குச் சொந்தமான நாய் கால பைரவராக வணங்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு நடைபெற்ற பூஜையின் போது காலபைரவர் முன்பு, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியுடன், பசவராஜ் பொம்மை, ஹெச்.டி.குமாரசாமி, டி.கே.சிவகுமார் ஆகியோரது படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அப்போது மூன்று தலைவர்களில் ஹெச்.டி. குமாரசாமியின் புகைப்படத்தைக் காலபைரவர் தேர்வு செய்து தனது கணிப்பை வெளிப்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளாகக் கால பைரவர் நாய் கணித்த அனைத்தும் நடந்திருப்பதாக அதன் உரிமையாளர் கோபியும் கூறியுள்ளார்.

Also Read : அந்த மனசுதான் சார் கடவுள்..! வீடற்று சிறுவனுக்கு உதவி புரிந்த காவல் அதிகாரி - வைரலான வீடியோ

இதனால், குமாரசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கர்நாடகா தேர்தல் களம் தேசிய தலைவர்களுடன் கூடிய பரப்புரையில் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், காலபைரவரின் கணிப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

top videos
    First published:

    Tags: Dog, Karnataka Election 2023