நம்மில் பலர் பிஸியான மெஷின் வாழ்விலிருந்து தப்பிக்க, நீண்டகாலமாக ஆசைப்படும் டூர் அல்லது ட்ரிப் செல்ல அல்லது சொந்தமாக தொழில் தொடங்க, பல்வேறு வகையான அத்தியாவசிய செலவுகளை செய்ய கை நிறைய பணம் வேண்டும் என விரும்புவோம். ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக நம்முடைய பல ஆசைகளை மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியாமல் ஏமாற்றத்தோடு வாழ பழகி கொண்டிருப்போம். லாட்டரி அல்லது ஜாக்பாட் அடித்தால் அமோகமாக வாழலாமே என்ற கற்பனையில் மிதப்போம். இதே போன்ற கற்பனையோடு லாட்டரி வாங்கிய ஒரு ட்ரக் டிரைவருக்கு அதிர்ஷடம் சூப்பராக ஒர்கவுட்டாகி உள்ளது.
அமெரிக்காவின் Oregon என்ற மாகாணத்தை சேர்ந்த ட்ரக் டிரைவர் ராபின் ரீடெல் (Robin Riedel). பல கனவுகளோடு லாட்டரி வாங்கிய இவருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொண்டு கொட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இவருக்கு லைஃப்டைம் ஜாக்பாட் அடித்துள்ளது. பொதுவாக லாட்டரியில் வாடிக்கையாளர் வெற்றி பெறும் தொகையானது அவருக்கு ஒரே நேரத்தில் செலுத்தப்படும், சில சந்தர்ப்பங்களில் பல வருடங்களில் செலுத்தப்படும். ஆனால் ராபின் ரீடெல்-லுக்கு லாட்டரியால் கிடைத்துள்ள ஜாக்பாட் என்ன தெரியுமா.! ஒவ்வொரு வாரமும் இவருக்கு குறிப்பிட்ட தொகை பரிசாக வழங்கப்படும் என்பது தான்,.
இந்த வாராந்திர பரிசு மழை சில வாரங்களுக்கு மட்டுமல்ல, ராபின் ரீடெல்-ன் வாழ்நாள் முழுவதும் அவருக்கு கிடைக்கும். இப்போது புரிகிறதா இவருக்கு கிடைத்திருக்கும் லாட்டரி பரிசை லைஃப்டைம் ஜாக்பாட் என ஏன் குறிப்பிட்டோம் என்று. இந்த ஜாக்பாட் காரணமாக இப்போது ராபின் ரீடெல் தனது வாழ்நாள் முழுவதும் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பார் மற்றும் ஒவ்வொரு வாரமும் கணிசமான பணத்தை பெறுவார். கடந்த மே 8 அன்று வின் ஃபார் லைஃப் கேமின் (Win for Life game) ஜாக்பாட்டை இவர் வென்றார், இதன் மூலம் வாராந்திர வெகுமதியாக இவருக்கு வாரம் $1,000 (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.82,000-க்கும் மேல்) அவரது வாழ்நாள் முழுவதும் கிடைக்க போகிறது.
Read More : “ரயில் போல நெனச்சுட்டேன்...” - பறக்கும் விமானத்தில் பீடி புகைத்த நபர் கைது...!
கடந்த 2001-ஆம் ஆண்டு முதலே இந்த கேமை விளையாடி வருவதாக குறிப்பிட்ட ராபின். ஒருவழியாக தற்போது இந்த மெகா ஜாக்பாட்டில் வெற்றி பெற்றுவிட்டதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு கான்கிரீட் நிறுவனத்திற்கு சொந்தமான ட்ரக்கில் டிரைவராக பணியாற்றி வரும் இவர் தான் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் ஓய்வு பெற உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.பணம் நம்மால் செய்ய முடியாத சில விஷயங்களை எளிதாக செய்ய உதவும் என கூறியுள்ளார்.
வரவிருக்கும் ஆண்டுகளில் முழுநேர வேலையிலிருந்து ஓய்வு பெற அவர் திட்டமிட்டுள்ள நிலையில், ராபின் ஜாக்பாட் பணத்தை செலவழிப்பதற்கான பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார். லாட்டரி மூலம் வாரா வாரம் கிடைக்கும் பணத்தை பில்களை செலுத்த, தனது வீட்டை மேம்படுத்தவும், தனது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட செயின்ட் லூசியாவுக்கு விடுமுறையில் செல்ல என ஆண்டுக்கு சுமார் ரூ.42 லட்சத்திற்கும் (52,000 டாலர்) அதிகமான தொகையை செலவிட யோசித்து வைத்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.