முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / போன்விட்டாவின் தரத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட நபர்... வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிறுவனம்..

போன்விட்டாவின் தரத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட நபர்... வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிறுவனம்..

ஹிமத்சிங்கா

ஹிமத்சிங்கா

இந்தியாவில் பிரபலமான போன்விட்டாவின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி விமர்சன வீடியோ வெளியிட்ட நபர் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இங்கிலாந்தைச் சேர்ந்த காட்பரி நிறுவனம் மிகவும் பிரபலமான கன்ஃபக்சனரி நிறுவனம். உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் இந்தியாவில் 1948 ஆம் ஆண்டு முதல் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் போன்விட்டா.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் போன்விட்டாவின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்குவது போல ஒருவர் சமூக வலைத்தளங்களில் விமர்சன வீடியோவை பதிவிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஹிமத்சின்கா என்பவர் போன்விட்டாவில் கலந்திருக்கும் பொருட்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதோடு, இதனால் சிறியவர்கள் கூட நீரிழிவு நோய்க்கு ஆளாவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கள் தயாரிப்புகளில் இல்லாத பொருட்களையெல்லாம் இருப்பதாக பேக்கிங் பவுச்சில் நிறுவனங்கள் அச்சிடுவதாகவும், அதை அரசு கண்டு கொள்வதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலானது.
 
View this post on Instagram

 

A post shared by Revant Himatsingka (@foodpharmer)இவரின் வீடியோவை சுமார் 1.20 கோடி பேர் பார்த்துள்ளனர். அதோடு பல்வேறு விமர்சனங்களும் உலா வரத் தொடங்கியது. இதையடுத்து ஹிமன்த்சின்காவிற்கு காட்பரி நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதோடு போன்விட்டாவில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது. போன்விட்டாவில் வைட்டமின் ஏ, சி, டி இரும்புசத்து, ஜிங்க், தாமிரம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்கப்படுத்தும் செலினியம் உள்ளிட்வைகள் இருப்பதாகவும், தங்கள் தயாரிப்பின் நம்பகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் ஹிமந்த்சின்கா மீது குற்றம் சாட்டியதோடு, அவர் விளக்கம் அளிக்கக் கோரி வழக்கறிஞர் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Also Read : வைரலான வீடியோ..! பழம் விற்கும் பெண்மணியை ரியல் ஹீரோ என பாராட்டிய ஆனந்த் மகேந்திரா

இதையடுத்து சின்கா தனது வீடியோவை நீக்கிவிட்டார். ஆனாலும், அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என காட்பரிஸ் நிறுவனம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்டுள்ளார். எந்த உள்நோகத்ததோடும் இந்த வீடியோவை தான் வெளியிடவில்லை என்றும், ஆனாலும் தனது செயலுக்காகத் தான் மன்னிப்பு கோருவதாகவும் சின்கா பதிவிட்டுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Revant Himatsingka (@foodpharmer)தனக்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாவதில் விருப்பம் இல்லை என்பதால் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதாகவும் சின்கா கூறியுள்ளார். முதலில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் போன்விட்டாவின் நன்மைகள் குறித்துப் பதிவிட்டதோடு, அதே வீடியோவில் போன்விட்டாவில் சர்க்கரை, கோகோ மற்றும் நிறமியங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தான் சர்ச்சைக்குள்ளாகி சட்ட நடவடிக்கைகள் வரை போவதற்குக் காரணமாகியிருந்தது.

First published:

Tags: Viral News