முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / “வெடிக்காமல் புதைந்திருக்கும் 110 மில்லியன் கண்ணிவெடிகள்..!” கண்ணிவெடிகள் விழிப்புணர்வு மற்றும் மீட்பு உதவி தினம் இன்று!

“வெடிக்காமல் புதைந்திருக்கும் 110 மில்லியன் கண்ணிவெடிகள்..!” கண்ணிவெடிகள் விழிப்புணர்வு மற்றும் மீட்பு உதவி தினம் இன்று!

கண்ணிவெடி விழிப்புணர்வு தினம்

கண்ணிவெடி விழிப்புணர்வு தினம்

ஆயுத மோதல்களின் குழப்பங்களுக்கு மத்தியில் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு - குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் - ஒவ்வொரு கண்ணிவெடியும் அவர்களை ஆபத்தின் பாதையில் கொண்டு செல்லலாம்

  • Last Updated :
  • Chennai, India

கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்களே.. என்று வடிவேலு வசனம் பேசி பார்த்திருப்போம். ஆனால் உலகத்தில் வெடிக்காமல் புதைந்திருக்கும் கண்ணிவெடிகளின் எண்ணிக்கையை கேட்டால் ஆடிவிடுவீர்கள். இதுவரை உலகம் முழுவதும் நடந்த போர்களின் போது புதைக்கப்பட்டு வெடிக்காமல், இன்றும் சுமார், 110 மில்லியன் கண்ணிவெடிகள் புதைந்திருக்கும் என்று ஒரு சர்வதேச நிறுவனம் கணித்துள்ளது.

இது விவசாயத்திற்காக தோண்டும்போதும், வீடுகட்ட தோண்டும் போதும், குழந்தைகள் விளையாட்டாக தோண்டும்போதும் வெளிப்படுகிறது. ஒரு சில செயலிழந்து போனாலும் ஒரு சில எடுக்கும் போது பாதுகாப்பாக கையாளப்படாமல் வெடித்துவிடுகிறது. இதனால் போர்கள் முடித்து ஆண்டுகள் ஆனாலும் உயிர்பலிகள் தொடருகின்றன.

கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்கும் கூறுகள் பொதுமக்களின் உயிர், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. அதோடு மக்களின் சமூக மற்றும் பொருளாதார மட்டங்களை பாதிக்கிறது. எனவே, 20 ஆண்டுகளாக, ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவை (UNMAS) மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி வெடிப்பு அபாயங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளில் கவனம் செலுத்துகிறது.

டிசம்பர் 8, 2005 அன்று  கண்ணிவெடித் தடை மாநாடு நடைபெற்றது. இதில் 164 நாடுகளில் கையொப்பமிட்டு  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 2006 ஏப்ரல் 4 அன்று முதல்,  ‘கண்ணிவெடிகள் விழிப்புணர்வு மற்றும் கண்ணிவெடி மீட்பு நடவடிக்கை உதவிக்கான சர்வதேச தினம்’ கொண்டாடப்படுகிறது. இது உலகம் முழுவதும் வெடிக்கும் கண்ணிவெடி மற்றும் தீங்கு விளைவிக்கும் புதை பொருட்களால் பாதிக்கப்பட்ட மக்களை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் அனுசரிக்கப்படுகிறது.

இன்டர்-ஏஜென்சி கொள்கையின்படி,கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் குழுவில் (IACG-MA) 12 துறைகள், முகவர் நிலையங்கள், நிதிகள் மற்றும் திட்டங்கள் உள்ளன. அவை கணினி அளவிலான கண்ணிவெடி தொழிலின் ஒருங்கிணைப்பு மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளைக் கண்காணிக்கின்றன.

இந்த நோக்கத்திற்காக உலக வங்கியுடன் இணைந்து IACG-MA ஐக்கிய நாடுகளின் ஆராய்ச்சிக்கான நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இறுதியாக, 2018 இல், ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கை சேவை (UNMAS) 2019 முதல் 2023 வரை UNMAS உத்தியைக் கூட்டி, ஒருங்கிணைத்து, வரைவு செய்தது.

அதன்படி கம்போடியா, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் பல தசாப்தங்களாக கண்ணிவெடிகள் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்காட்டும் வகையில், "கண்ணிவெடி நடவடிக்கைக்கு காத்திருக்க முடியாது" (Mine action can't wait) என்ற பிரச்சாரத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இது குறித்து ஐநா பொது செயலாளர் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுத மோதல்களின் குழப்பங்களுக்கு மத்தியில் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள்  ஒவ்வொரு கண்ணிவெடியும் அவர்களை ஆபத்தின் பாதையில் கொண்டு செல்லலாம். கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்கும் குண்டுகள் சமூகங்களை குப்பையில் போடுகின்றன.

சாலைகள் மற்றும் வயல்வெளிகள் வெட்டப்படும் போது, ​​வெடிக்காத வெடிகுண்டு பொருட்களை குழந்தைகள் கண்டுபிடித்து விளையாடும் போது அது அவர்களின் அமைதி, பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது. இந்த கொடிய ஆயுதங்களை அகற்றவும், தேசிய அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கவும், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விவசாயிகளின் வயல்களுக்கு பாதுகாப்பான அணுகலை உறுதி செய்யவும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி சேவை கூட்டாளர்களை ஒன்று திரட்டுகிறது.

தனி நபர் கண்ணிவெடித் தடைச் சட்டம், கிளஸ்டர் வெடிமருந்துகள் தொடர்பான மாநாடு மற்றும் சில மரபுவழி ஆயுதங்கள் தொடர்பான மாநாடு ஆகியவற்றை அங்கீகரித்து முழுமையாக செயல்படுத்துமாறு உறுப்பு நாடுகளை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

First published:

Tags: Landmines, Trending, United Nation