ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை அறிக்கை 2023க்கான உலக மக்ககொகை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் உலக நாடுகளின் மக்கள் தொகை குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட 29 லட்சம் அதிகம் என்பது அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவின் மக்கள் தொகை 142.86 என்றும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இரண்டு நாடுகளுக்கிடையிலான மக்கள் தொகை வித்தியாசம் கிட்டத்தட்ட 29 லட்சம். ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கைபடி, இந்தியாவின் மக்கள்தொகையில் 25 விழுக்காடு பேர் 0-14 வயதுக்குட்பட்டவர்கள். 18 விழுக்காடு பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்கள். 26 விழுக்காடு பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்கள். 68 விழுக்காடு பேர் 15-64 வயதுக்குட்டப்பட்டவர்கள் என்றும் 7 விழுக்காடு பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி இந்தியா உலகில் இளம் தலைமுறையினர் அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 15 முதல் 24 வயதுடையோர் 26 விழுக்காடு. அதாவது இந்தியாவில் கிட்டத்தட்ட 37 கோடி பேர் இளையோர். இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிகம். அதே போல் சீனாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 20கோடிப் பேர் இருப்பதாக அறிக்கை சொல்கிறது. அதே சமயம் இந்தியாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 7 விழுக்காடு தான்.
Read More : நீங்களா வேலைய விட்டு போனா ஒரு வருஷ சம்பளம் போனஸ்...! நிறுவனங்கள் வைக்கும் புது டிவிஸ்ட்
அதாவது இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் தான் முதியவர்கள். அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவை 2030-ல் இந்தியா விஞ்சிவிடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.பின்னர், கோட்டைச் சற்று முன்னால் தள்ளி வைத்து 2027-ல் முந்திவிடும் என்றார்கள். பின்னர் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வந்த வேகத்தை பார்த்த நிபுணர்கள் 2025-லேயே இந்தியா உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடாகிவிடும் என்று எச்சரித்தனர். ஆனால் நிபுணர்களை கணிப்புகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி 2023லே இந்தியா மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் எழுபதுகளில் தொடங்கியது. ஆனால் 1979ஆம் ஆண்டில் தான் உலகின் மற்ற நாடுகளில ஒற்றைக் குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டது. மேலும், குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை மற்ற நாடுகள் முன்னரே தளர்த்த தொடங்கிய நிலையில் சீனா ஒற்றைக் குழந்தைத் திட்டத்தை 2016-ல்தான் தளர்த்தியது. எல்லோரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.