எதைச் செய்தாலும் அது மற்றவர்களால் பேசப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிகழ்வுகள் வளைகுடா நாடுகளில் அடிக்கடி நடைபெறும். அதுவும் துபாயில் இது போன்ற சாதனை சம்பவங்களுக்கு பஞ்சமிருக்காது. அப்படிப்பட்ட மயிர்க் கூச்செரியும் சம்பவம் ஒன்று துபாயில் நடைபெற்றுள்ளது. துபாயில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் கட்டப்பட்டுள்ள ஹோட்டலின் பெயர் புர்ஜ் அல் அராப். உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஹோட்டல் 56 மாடிகள் உள்ளன.
இந்த கட்டிடத்தின் உயரம் 321 மீட்டர். அதாவது பாரீசில் உள்ள ஈஃபிள் கோபுரத்தை விட 14 மீட்டர் உயரம். இந்த கட்டிடத்தின் உச்சியில் ஹெலிபேட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவில் இருக்கும் அந்த ஹெலிபேடின் விட்டம் வெறும் 27 மீட்டர் மட்டுமே. அவசர காலத்தில் அங்கு ஹெலிகாப்டர்களை தரையிறக்கலாம். அந்த சிறிய ஹெலிபேடில் சிறிய ரக விமானத்தை தரையிறக்கி சாதனை படைத்துள்ளார் போலந்து நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவர்.
லூக் செஸ்பியேலா என்ற விஞ்ஞானி தான் அந்த சாதனைக்குச் சொந்தக்காரர். இவர் ரெட்புல் நிறுவனம் சார்பில் விமான சாகசங்கள் செய்யும் வீரர். அதோடு ஏர்பஸ் 320 விமானத்தை ஓட்டும் விமானி. செஸ்பியாலோ இதே போல் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார். புர்ஜ் அல் அராப் கட்டிடத்தின் 56 ஆவது மாடியில் உள்ள 27 மீட்டர் நீளமுள்ள ஹெலிபேடில் சிறிய ரக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார் இந்த விமானி. இதற்காக பிரத்யேகமாக விமானம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
Read More : தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்... ஒரே நாளில் விவகாரத்து
அந்த விமானத்தைக் கொண்டு பயிற்சி எடுத்துள்ளார். சுமார் 650 முறைகளுக்கு மேல் விமானத்தை தரையிறக்குவதற்காக பயிற்சி எடுத்துள்ளார் செஸ்பியேலா. இரண்டு ஆண்டுகளாக இந்த பயிற்சியும் முயற்சியும் தொடர்ந்திருக்கிறது. இறுதியாக அந்த சாதனையை நிகழ்த்திவிட்டார் செஸ்பியாலோ. மிகவும் திகிலான, இதயத்தை நிறுத்தச் செய்யும் இந்த தரையிறக்க வீடியோவை ரெட்புல் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
துபாய் ஊடகங்களும் இந்த சாதனை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.
இந்த லேண்டிங் தொடர்பான வீடியோவை இதுவரை 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதோடு 1.75 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது இந்த வீடியோ. செஸ்பியாலோவின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகிறார்கள். இவ்வளவு குறுகிற விட்டம் கொண்ட தளத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் அடி உயரத்தில் வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கிய சம்பவம் உலகிலேயே இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Viral Video