முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஒரே தெருவில் வசிக்கும் 6000 பேர்.. வியக்க வைக்கும் குடியிருப்புப் பகுதி..!

ஒரே தெருவில் வசிக்கும் 6000 பேர்.. வியக்க வைக்கும் குடியிருப்புப் பகுதி..!

வான்வழி புகைப்படம்..!

வான்வழி புகைப்படம்..!

இந்த மாதத்தின் தொடக்கத்தில் 6000 குடியிருப்புகள் ஒரே தெருவில் இருப்பது போன்ற வான்வழி புகைப்படம் ஒன்று பல்வேறு தளங்களில் பெருமளவில் வைரலானது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் சாதாரண நகர்ப்புற அல்லது புறநகர் கிராமத்தில் பரந்த நிலப்பரப்பில் பல குடியிருப்புகள் அமைந்திருப்பது பொதுவானது தான். ஆனால், போலந்தில் உள்ள ஒரு விசித்திரமான நகரம் நம்ம வியப்பில் ஆழ்த்தி உளது. ஆம், இங்கு 6,000 குடியிருப்பாளர்கள் ஒரே தெருவில் வசிக்கின்றனர் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தானே.

இந்த மாத தொடக்கத்தில் 6000 குடியிருப்புகள் ஒரே தெருவில் இருப்பது போன்ற அதன் வான்வழி புகைப்படம் ஒன்று பல்வேறு தளங்களில் பெருமளவில் வைரலானது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தைப் பற்றி தெரியாதவர்கள் கூட அதைப் பற்றி வெகுவாக பேசத் தொடங்கியுள்ளனர். சுலோசோவா தெற்கு போலந்தின் கிராகோ கவுண்டியில் அமைந்துள்ளது. இது அடிப்படையில் ஒரு தெருவைச் சுற்றி கூட்டமாக மக்கள் வசிக்கும் ஒரு கிராமமாகும். இது போலந்தில் மிக நீளமான ஒன்றாகும். 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இருபுறமும் பரந்த பசுமையான நிலங்கள் சூழ்ந்து இருக்க, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீடுகள் அமைந்திருந்தன. முழு நகரத்திலும் ஒரே ஒரு நீண்ட தெரு தான் உள்ளது. அனைத்து வீடுகளும் தெருவின் இருபுறமும் அமைந்திருந்தன.அந்த வைரலான புகைப்படத்தைப் பார்த்தும் நீங்கள் நம்பவில்லை என்றால், நீங்கள் கூகிள் மேப்பில் கூட பார்க்கலாம்.

Read More : பற்களில் துப்பாக்கி.. ஏகே 47 மாடலில் வைர பற்கள்.. டிரெண்டிங்கில் தெறிக்கவிடும் சூரத் வியாபாரிகள்..!

சுலோசோவா அதன் அழகிய காட்சிகள் மற்றும் அசாதாரண அமைப்பின் காரணமாக 'லிட்டில் டஸ்கனி' என்று அழைக்கப்பட்டது. CSO போலந்தின் படி, 2017 ஆம் ஆண்டில் இந்த இடத்தின் மக்கள் தொகை 5,819 ஆக இருந்தது. 2013 ஆண்டில் 19 பேர் அதிகரித்தனர். எனினும், கடந்த சில ஆண்டுகளாக இங்கு வசிக்கும் இளைஞர்களில் பலர் தங்கள் படிப்பு அல்லது வேறு காரணங்களுக்காக வெளியேறியதால் இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.

top videos

    இது உண்மையில் 6 ஆம் நூற்றாண்டில் போலந்து ராட்சியத்தின் கிரீடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உயர்குடி இராணுவ அதிகாரியால் நிறுவப்பட்டது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தளம் என்றாலும் கூட, இது போன்ற இடம் உள்ளது என்று பலருக்குத் தெரியாமல் தான் இருந்தது.தற்போது 6000 குடியிருப்புகள் ஒரே தெருவில் குவிந்து இருப்பது போன்ற வான்வழி புகைப்படம் பல்வேறு தளங்களில் பெருமளவில் வைரலானதைத் தொடர்ந்து அந்த இடத்தைப் பற்றி பலரும் அறிந்து கொண்ட தோடு, அதை பற்றி பேசவும் தொடங்கி உள்ளனர்.

    First published:

    Tags: Trending, Viral