ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி சர்வதேச இட்லி தினமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் அதிக மக்களால் விரும்பி உண்ணப்படும் இட்லிக்கு என்று தனி ரசிகர் படையே உண்டு. தென்னிந்தியாவில் ஏதேனும் வீட்டு விசேஷங்களின் போது கூட இட்லி தான் முக்கிய உணவு பொருளாக பந்தியில் இடம் பெறுகிறது.
தயாரிப்பதற்கு எளிதாகவும் மிகவும் சுவையாகவும் இருப்பதாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுவதாலும் இட்லி மிகவும் பிரபலமான ஒரு உணவு வகையாக தற்போது வரை முன்னிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஸ்விக்கி நிறுவனமானது ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்களே எதிர்பார்க்காதபடி சில ஆச்சரியத்துக்க புள்ளி விவரங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவில் எந்த அளவிற்கு இட்லி பிரபலமாக உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக இந்த புள்ளி விவரம் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கிடைத்துள்ள தகவலின்படி இந்தியாவில் மட்டும் கடந்த வருடத்தில் 33 மில்லியன் பிளேட் இட்லிக்கள் ஸ்விக்கி நிறுவனத்தின் மூலம் டெலிவர் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : சேலை கட்டிக்கொண்டு கால்பந்தை சுழற்றி விளையாடும் மகளிர்..! - வைரல் வீடியோ!
குறிப்பாக ஹைதராபாத்தை சேர்ந்த இட்லி பிரியர் ஒருவர் கடந்த 12 மாதங்களில் மட்டும் 6 லட்ச ரூபாய்க்கு இட்லி ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. என்னதான் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக இட்லி இருந்தாலும் ஒரே வருடத்தில் 6 லட்ச ரூபாய்க்கு இட்லி ஆர்டர் செய்துள்ள அந்த மனிதரின் இட்லி மீது உள்ள காதலை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவர் ஸ்விக்கி நிறுவனத்தின் மூலம் ஆர்டர் செய்த இட்லியின் மதிப்பு மட்டுமே ஒரு வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய் வரை இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைத் தவிர அவர் எங்கேனும் பயணம் சென்றாலும் அங்கு இருக்கும் கடைகளிலும் கூட இட்லியைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுவாராம். மேலும் ஸ்விக்கியில் அதிக அளவில் இட்லி ஆர்டர் செய்தவர்கள் வரிசையில் இவர் முன்னிலையில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 8,428 பிளேட் இட்லிக்களை அவர் ஆர்டர் செய்துள்ளார். அதனை தங்களது நண்பர்களுக்காகவும் குடும்பத்தார்களுக்காகவும் இங்கேயும் பயணங்கள் செய்யும் போதும் ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கியமாக இந்தியாவில் அதிக இட்லிகளை ஆர்டர் செய்த நகரங்களின் வரிசையில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகியவை முன்னிலையில் இருக்கின்றன. இதைத் தவிர டெல்லி, கொல்கட்டா, கொச்சி, மும்பை, கோயம்புத்தூர், புனே, விசாகப்பட்டினம் போன்ற நகரங்கலிளும் இட்லி கணிசமான அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.