ஹைதராபாத்தில் உள்ள நிசாம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸை சேர்ந்த இருதய நோய் நிபுணர்கள் 67 வயது நோயாளி ஒருவருக்கு, அரிதான மருத்துவ சிகிச்சையை செய்வதன் மூலமாக புதிய சாதனையை படைத்துள்ளனர். தெலுங்கானா அரசு மருத்துவமனையில் இது போன்ற அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். TMVR என்று சொல்லப்படும் மினிமலி இன்வேசிவ் டிரான்சாதீட்டர் மிட்ரல் வால்வு ரீபிளேஸ்மெண்ட் (Transcatheter Mitral Valve Replacement) சிகிச்சை ஜகிட்யாலா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த தேவம்மா என்பவருக்கு செய்யப்பட்டது.
இவருக்கு 2015 ஆம் ஆண்டு ஓபன் ஹார்ட் சர்ஜரி மூலமாக மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது மிட்ரல் வால்வில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தேவம்மாவின் பழைய மருத்துவ குறிப்புகள் மற்றும் அவரது வயதை கருத்தில் கொண்டு இருதய நோய் நிபுணர்களை அடங்கிய குழுவானது இவருக்குTMVR என்ற சிகிச்சை மூலமாக சேதமடைந்த மிட்ரல் வால்வை ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யாமலேயே குணப்படுத்த முடிவு செய்தனர்.
இந்த சிகிச்சையின் போது, ஒரு செருகுகுழலானது (காத்திட்டர்) தொண்டைப் பகுதியில் நுழைக்கப்பட்டது. இது இதயத்தை சென்றடைந்து மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சையை செய்தது.அந்த மருத்துவமனையில் காத்திட்டர் பயன்படுத்தி மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தேவம்மாவிற்கு 67 வயது ஆகும் காரணத்தினால், அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்வது ஆபத்தில் சென்றடையலாம் என்பதால் இந்த சிகிச்சை முறை தேர்வு செய்யப்பட்டது.
இதய நோயியல் துறையின் தலைவரான டாக்டர், பி. ஶ்ரீனிவாஸ் அவர்களின் மேற்பார்வையில் டாக்டர். சத்தீஷ் ராவ், மணிகிருஷ்ணா, ஹரிஷ் ரெட்டி, பிரதீப் சதானந் மற்றும் மெஹரூனிசா ஆகியோர்களை உள்ளடக்கிய குழு இந்த மருத்துவ சிகிச்சையை செய்தது. இந்த சிகிச்சைக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி மூலமாக பொருளாதார உதவி வழங்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.TMVR என்பது இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஆகக்கூடிய ஒரு மருத்துவ செயல்முறை ஆகும். இதன் போது நோயாளிக்கு சௌகரியத்தை வழங்குவதன் பொருட்டு அனஸ்தீசியா வழங்கப்படுகிறது.
இந்த சிகிச்சைக்கு முன்னதாக எலக்ட்ரோ கார்டியோகிராம் பயன்படுத்தி இதயத்தின் செயல்பாடு கணிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவுகள், இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் போன்றவற்றை அளவிடக்கூடிய கருவிகளும் நோயாளியின் உடலில் இணைக்கப்படும். சிகிச்சைக்கு பிறகு நோயாளி ஒரு இரவு மட்டும் ICU வில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார். அதன் பிறகு மூன்று முதல் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தங்கிய பிறகு வீடு திரும்பலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.