யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் எண்ணற்ற வகையிலான புதிய உணவகங்களையும் உணவுகளையும் மக்களுக்கு யூடியூபர்கள் அறிமுகம் செய்து வருகின்றனர்.
அப்படி ரூஹ் அஃப்சா (Rooh Afza) என்கிற பானம் தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது. ஆனால் இது புதியது அல்ல. 115 ஆண்டுகள் பழமையான பானம். இணையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பில் இருந்தே பல ஆண்டுகளாக பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்தமான பானமாக இருந்துவருகிறது. இந்த ரூஹ் அஃப்ஸா என்பது வேறு ஒன்றும் இல்லை, ரோஸ் மில்க் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரோஸ் எசன்ஸ் தான்.
ரூஹ் அஃப்சா என்பது உருது மொழியில் "ஆன்மாவுக்கு புத்துணர்ச்சி" என்று அர்த்தமாகும். ரூஹ் அஃப்சா சர்பத்துக்கு என்று தனி வரலாறு உண்டு. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு, கோடை காலத்தின் விருப்பமான பானமாக இன்று வரை இருந்து வருகிறது.
ரூஹ் அஃப்சாவின் வரலாறு 1906-இல் இருந்து தொடங்குகிறது. இதனை முதன்முதலில் மூலிகை மருத்துவரான ஹக்கீம் அப்துல் மஜித் என்பவர்தான் உருவாக்கினார். கடந்த 1883-இல் பிறந்த ஹக்கீம் அப்துல் மஜித் , பழமையான யுனானி மருத்துவ முறையைப் படித்தார். படித்து முடித்த பின் பாரம்பரிய மருத்துவ ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், 1906 ஆம் ஆண்டில், அப்போதைய பழைய டெல்லியில் ஒரு மூலிகைக் கடையை நிறுவுவதற்கு முடிவு செய்தார். அப்போது இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.
இதையும் படிக்க | 8 பல்லு தெரியணும்.. அழகா சிரிக்கணும்.. சிரிப்பதற்கு வகுப்பு எடுக்கும் ஜப்பான்!
அப்போதைய டெல்லி பகுதியில், தாங்க முடியாத வெப்பத்தால் ஏற்படும் நீரிழப்பு, பக்கவாதம், வயிற்றுப்போக்கு போன்ற
பல உடல்நல பாதிப்புகளை எளிதாக குணப்படுத்த கூடிய மருந்து ஒன்றை அவர் கண்டுபிடிக்க முயற்சித்தார். இதன் மூலம், மூலிகைகள் மற்றும் பூக்களை எடுத்து கொண்டு அதில் சர்க்கரை மற்றும் பிற சாறுகளை கலந்து ஒரு புத்துணர்ச்சியூட்டும் ஒரு பானத்தை கண்டுபிடித்தார். அவ்வாறு உருவாக்கிய அந்த பானத்திற்கு 'ரூஹ் அஃப்சா' என்று பெயர் வைத்தார். உடலை குளிர்ச்சியாக்கும் சுவையான இந்த பானம் அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்ததால் விரைவில் பிரபலமடையத் தொடங்கியது. இயற்கையான பழங்கள் மற்றும் மூலிகைகள் கொண்ட இந்த பானத்தை விற்கும் கடையை ஹம்தார்ட் என்று பெயரிட்டு நடந்தி வந்துள்ளார்.
இப்படியொரு சிறந்த பானத்தை கண்டுபிடித்த மஜித் 1922-இல் தனது 34வது வயதில் உயிரிழந்தார். இவர் இறப்பிற்கு பிறகு, அவரது மனைவி ரபேயா பேகம் இந்த கடையை எடுத்து நடத்திவந்துள்ளார். பிறகு, அவர் ஹம்தார்டை ஒரு அறக்கட்டளையாக மாற்றி, பொது நலனுக்காக செயல்படும் நிறுவனமாக கொண்டு சென்றார். 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது ரபேயா பேகத்தின் மூத்த மகன் ஹக்கீம் முகமது ஹமீத் இந்தியாவில் உள்ள கடையை பார்த்துக்கொண்டார். அவரது இளைய மகன் ஹக்கீம் முகமது சைத், புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானுக்குச் சென்று, 'ஹம்தார்த் பாகிஸ்தான்' என்ற பெயரில் ரூஹ் அஃப்ஸாவைத் தயாரித்து விற்க தொடங்கினார்.
மேலும், 1971 போருக்குப் பிறகு, புதிதாக உருவாக்கப்பட்ட பங்களாதேஷிலும் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் ரூஹ் அஃப்சாவை விற்கத்தொடங்கினர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த மூன்று நாடுகளில் உள்ள கடைகளும் சுயாதீனமானவை. அத்துடன் இவை பல்வேறு உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களால் எடுத்து நடந்தப்படுகின்றன. முக்கியமாக, முஸ்லிம்களின் நோன்பு மாதமான ரமலான் மாதத்தில் இந்த பானத்தை பலரும் வாங்கி பருகுவதுண்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sugary Drinks, Viral