முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சாப்பிட்டதோ ஒரு தோசை... ஆனால்..? - ஐபிஎஸ் அதிகாரியை அதிரவைத்த சம்பவம்!

சாப்பிட்டதோ ஒரு தோசை... ஆனால்..? - ஐபிஎஸ் அதிகாரியை அதிரவைத்த சம்பவம்!

வைரலாகும் தோசை ட்வீட் ( மாதிரிப்படம்)

வைரலாகும் தோசை ட்வீட் ( மாதிரிப்படம்)

ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு மிகவும் வித்தியாசமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதைப் பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலர் அவ்வப்போது உணவகங்களுக்கு சென்று உணவு அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் உணவகங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் அவற்றைப் பற்றி நாம் பெரிதாக எதுவும் கவலைப்படுவதில்லை. ஆனால் கட்டண விஷயத்தில் சில சமயங்களில் உணவகங்களும் தவறு செய்கின்றன. அது போன்ற சமயங்களில் நாம் கவனமாக கட்டணத்தை சரிபார்த்து அவர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களும் அதனை திருத்திக் கொள்வார்கள்.

ஆனால் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு மிகவும் வித்தியாசமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதைப் பற்றி அவர் தனது ட்விட்டர் வலை பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது உணவகம் ஒன்றில் தனியாக சென்று அவர் தனக்காக ஒரே ஒரு தோசையை மட்டும் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்ததும் உணவிற்கான கட்டணத்தை பார்த்த அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்குதான் சுவாரசியமே! அருண் போத்ரா என பேர் கொண்ட அந்த ஐபிஎஸ் அதிகாரி சாப்பிட்டதோ ஒரே ஒரு தோசை. மேலும் அவர் மட்டுமே தனியாக அந்த உணவகத்திற்கு சென்று உணவு அருந்தி உள்ளார்.

ஆனால் அவருடைய உணவிற்கான பில்லை பார்த்தபோது அதில் இரண்டு தோசைக்கான விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பற்றி உணவு பரிமாறுபவரிடம் கேட்டபோது, இவருக்கு ஒரு பக்கத்துக்கு டேபிளில் உட்கார்ந்து ஒருவர் மசால் தோசை ஆர்டர் செய்ததாகவும், அவரும் ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ராவுடன் ஒன்றாக உணவருந்த வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் உண்டதற்கான மசால் தோசைக்கான கட்டணத்தை அருணின் பெயரில் எழுதும் படி அவர் கூறியுள்ளார்.

Read More : யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்

சற்று கேளிக்கையாகவும் அதே சமயத்தில் ஐபிஎஸ் அதிகாரியே ஏமாற்றப்பட்ட இந்த சம்பவமானது ட்விட்டர் வாசிகள் இடையே மிகப் பெரும் விவாதங்களை உண்டாக்கியுள்ளது. பலரும் இந்த சம்பவத்தை வைத்து பல்வேறு வித நகைச்சுவைகளை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒரு ட்விட்டர் வாசி கூறுகையில், “இந்த ஏமாற்றும் முறையானது தோசையை போல மிகவும் பழைய முறை” என்று விளையாட்டாக கூறியுள்ளார்.

மற்றொருவரோ “இந்தத் திட்டம் நன்றாக உள்ளது. மறுமுறை நான் செல்லும்போது இதனை முயற்சி செய்து பார்க்கிறேன்” என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மற்றொருவரோ “நான் இன்ற உணவகத்திற்கு சென்று தோசை சாப்பிட்டேன். பிறகு அங்கிருக்கும் வெயிட்டருக்கு டிப்ஸ் கொடுத்து தோசைக்கான கட்டணத்தை பக்கத்து டேபிளில் இருக்கும் சகோதரர் ஒருவர் கட்டுவார் என கூறி அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

top videos

    இப்போது அந்த சகோதரர் கட்டணத்தை செலுத்தினாரா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை மிகவும் வேடிக்கையாக உள்ளது” என்று விளையாட்டாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மற்றொரு ட்விட்டர் வாசி ஒருவர் கூறுகையில், “உணவிற்கு கட்டணம் செலுத்த முடியாத ஒருவருக்காக நீங்கள் கட்டணம் செலுத்திய உள்ளீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர். முகம் தெரியாத ஒருவருக்கு நீங்கள் உதவி செய்து உள்ளீர்கள்” என்று நெகிழ்ச்சியாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

    First published:

    Tags: Trending, Tweet, Viral