முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / வெல்வெட் துணி.. தேவதைகள்.. இறந்த பின்பு இதுதான் நடக்கும்.. பகீர் கிளப்பிய அமெரிக்க நபர்!

வெல்வெட் துணி.. தேவதைகள்.. இறந்த பின்பு இதுதான் நடக்கும்.. பகீர் கிளப்பிய அமெரிக்க நபர்!

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தனக்கென்று ஆன்மீக அனுபவம் ஒன்று ஏற்பட்டதாகவும், அந்த அனுபவம் மிக அழகாக இருந்தது என்றும் டேவிட் கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு நபர் இறந்த பின்னால் என்ன நடக்கும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. நாம் நினைப்பது போல சொர்க்கம் அல்லது நரகத்தின் வாயிற்கதவு திறக்குமா அல்லது வெறுமையாக இருக்குமா அல்லது ஆழ்ந்த உறக்கம் போல இருக்குமா? எதற்குமே உறுதியான பதில் கிடையாது. ஆனால், அமெரிக்காவின் வடக்கு கரோலினா நகரைச் சேர்ந்த டேவிட் ஹான்செல் என்பவர், இறப்புக்கு அருகாமை வரை சென்று வந்த நிலையில், அதுதொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.

வாழ்க்கைக்குப் பிறகு தான் எதிர்பார்க்காத ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறுகிறார் அவர். முன்னதாக, கடந்த 2015ஆம் ஆண்டில் செப்சிஸ் மற்றும் நுரையீரல் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட டேவிட் ஹான்செல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது இரண்டு மாதத்திற்கும் மேலாக அவர் கோமா நிலையில் இருந்தார்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தனக்கென்று ஆன்மீக அனுபவம் ஒன்று ஏற்பட்டதாகவும், அந்த அனுபவம் மிக அழகாக இருந்தது என்றும் டேவிட் கூறியுள்ளார். வெல்வெட் துணி போர்த்தியதைப் போல இரவு வானமும், முதலும் இன்றி, முடிவும் இன்றி ஒரு அனுபவம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டேவிட் கூறுகையில், “உடல்நலன் சரியில்லாமல் இருந்தபோது நான் கண்களை மூடியிருந்தேன். கண்களை திறந்தபோது இரவு நேர வானில் இருந்தேன். மேகம் எதுவும் இல்லை. எந்த தொடக்கமும் இல்லை. எதுவுவே இல்லை. தொடக்கம் என்று கருதவோ, முடிவு என்று கருதவோ அங்கு எதுவும் கிடையாது.

Read More : வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த குழந்தை…பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்..!

அங்கு தேவதைகள் இருந்தனர். ஆனால், முத்துக்கள் நிறைந்த வாயிற்கதவு திறந்ததாக சொல்ல முடியாது. அதே சமயம் நான் ஒரு பப்பில் இருப்பதைப் போல உணர்ந்தேன். என்னை சுற்றியிலும் பாட்டில்கள் இருந்தன. ஆனால், அங்கு மதுபானம் எதுவும் கிடையாது. பப்-ஐ பார்வையிட்ட பிறகு, நான் அப்படியே நடக்க ஆரம்பித்தேன். அது பறந்து செல்வதைப் போன்ற மனநிலையை ஏற்படுத்தியது. அங்குள்ள கட்டடங்கள் மார்பிள் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அவ்வளவு அழகான மார்பிள்களை நான் அதுவரையிலும் பார்த்தது கிடையாது’’ என்றார் டேவிட்.

கோமா நிலையில் இருந்து எழுந்த பிறகு, அனைத்து நோய்களில் இருந்தும் குணமாகியதைப் போல டேவிட் உணர்ந்தார். தனக்கு யாரெல்லாம் கெடுதல் செய்திருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் மன்னிப்பு வழங்கியதைப் போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, மதம் குறித்த அனைத்து விஷயங்களிலும் அவருக்கு ஒரு புரிதல் ஏற்பட்டிருந்தது.

top videos

    பொதுமக்கள் பலருக்கும் டேவிட்டின் அனுபவம் நம்பக் கூடியதாக இல்லை. ஆனால், தான் பார்த்த அனைத்தையும் பொய் என்று மறுக்க முடியாது என உறுதியாகக் கூறுகிறார் டேவிட். உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், இறப்புக்கு பிறகான வாழ்க்கை அமைதியானதாகவும், அழகானதாகவும் இருக்கும் என்கிறார் அவர்.

    First published:

    Tags: Trending, Viral