முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கையெழுத்துக் கலையை பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் ஓவியர்..

கையெழுத்துக் கலையை பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் ஓவியர்..

ஷிவ் கோஷ்..!

ஷிவ் கோஷ்..!

ஒரு சிலருடைய கையெழுத்து கண்களில் ஒற்றிக்கொள்வது போன்று இருக்கும். ஒரு சிலருடைய கையெழுத்து ஓவியம் வரைந்தது போல இருக்கும். எனவே கையெழுத்து என்பது ஒரு கலை வடிவம் என்று கூறினால் மிகையாகாது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கையெழுத்துக் கலையை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார் மேற்குவங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த ஷிவ் கோஷ்.

கைகளால் எழுதுவது என்பது ஒரு கலை. ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் தொடங்கும் எழுத்து பயிற்சி, மாணவர் பருவம் முடிந்தவுடன் காணாமல் போய்விடுகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகம் எழுதுவதற்கு தேவையே இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், அழகான கையெழுத்தைப் பார்க்கும் போதே மனம் பாராட்டத் தொடங்கும்.

ஒரு சிலருடைய கையெழுத்து கண்களில் ஒற்றிக்கொள்வது போன்று இருக்கும். ஒரு சிலருடைய கையெழுத்து ஓவியம் வரைந்தது போல இருக்கும். எனவே கையெழுத்து என்பது ஒரு கலை வடிவம் என்று கூறினால் மிகையாகாது. அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதுவதற்கு அதற்குரிய முயற்சிகள் கட்டாயமாக தேவை. எல்லோரும் தொடக்கத்திலேயே அழகாக எழுதுவதில்லை. அதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. இப்போது கூட மோசமான கையெழுத்துக்காக திட்டு வாங்குபவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் அழகாக எழுதுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டால் கையெழுத்து ஓவியம் வரைவது போல மிக நேர்த்தியாக இருக்கும். ஆங்கிலத்தில் இதற்கு கேலிகிராஃபி என்று ஒரு தனி பயிற்சி கலையாகவே இருக்கிறது. மோசமான கையெழுத்து இருந்தால் என்ன, அழகாக நிதானமாக எழுதுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டால் கையெழுத்து சரியாகிவிடும் என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூறுவதுண்டு.

Read More : காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் செல்பி எடுத்தால் எப்படி இருக்கும்..? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் AI புகைப்படங்கள்...!

ஒரு சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் சிலரின் கையெழுத்து கிறுக்கலாகத்தான் இருக்கும். ஆனால் பள்ளிக்காலம் முடிந்து, மாணவராக இருந்த பருவம் முடிந்து வயதாக வயதாக கையெழுத்து நேர்த்தியாகவும் பார்ப்பதற்கு தெளிவாகவும் தானாகவே மாறும்.யாரெல்லாம் கையெழுத்தை மேம்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி நிச்சயமாக தேடி வரும்.

இப்போது கையெழுத்து புழக்கத்தில் இருந்தாலும் டிஜிட்டல் உலகில் கைகளால் எழுதுவது என்பது வெகுவாக குறைந்துவிட்டது. தெளிவான கையெழுத்து மட்டுமல்லாமல் அழகாக எழுதப்படுவதும் பாராட்டுகளை அள்ளிக் குவிக்க தவறுவதில்லை. கொல்கத்தாவில், ஹவுரா நகரில் இருக்கும் ஒரு கலைஞர் கையெழுத்து கலையை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். அவர் ஒரு ஓவியர், அதுமட்டுமில்லாமல் கையெழுத்து கலையில் நிபுணத்துவம் பெற்று இருக்கிறார். மேற்கு வங்காளம் முழுவதும் ஷிவ் கோஷ் என்றால் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.

top videos

    இவருடைய கலை படைப்புகள் அனைத்துமே மிகவும் பிரபலம். ஷிவ் கோஷ் உருவாக்கிய பல விதமான கலைப் பொருட்கள் வீட்டிலேயே ஒரு அருங்காட்சியகமாக வைக்கப்பட்டுள்ளது. இவர் மிகப்பெரிய கலைஞராக மட்டுமல்லாமல், அழகான கையெழுத்துக்காக பலவிதமான பரிசுகளையும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவருடைய கையெழுத்து நாம் எதிர்ப்பார்க்காத அளவுக்கு பிரமிப்பூட்டும்படி அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். கடந்த 20 ஆண்டுகளாக பல விதமான கலைப்படைப்புகளை உருவாக்கி இருக்கிறார், அதில் அழகான கையெழுத்தும் அடங்கும்.

    First published:

    Tags: Trending, Viral