"உலகின் வேகமான பெண்" என்று முடிசூட்டப்பட்ட அமெரிக்க ஸ்டண்ட் கலைஞர் கிட்டி ஓ நீலின் 77 ஆவது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் தனித்துவமான டூடூலுடன் கொண்டாடி வருகிறது. வாஷிங்டன் DC-ஐ சேர்ந்த கலைஞர் மீயா டிஜியாங் தயாரித்த டூடுல் , ராக்கெட் வேக காருக்கு அடுத்தபடியாக அவள் பெருமையாகவும் புன்னகையுடனும் நிற்கும் காட்சியுடன் நீலின் வாழ்க்கையை விளக்குகிறது.
யார் அந்த கிட்டி ஓ' நீல்?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கார்பஸ் கிறிஸ்டியில் செரோகி பூர்வீக அமெரிக்க தாய் மற்றும் ஐரிஷ் தந்தைக்கு 1946 இல் பிறந்தார். பிறந்த சில மாதங்களிலேயே பல நோய்களுக்கு ஆளான அவள் குழந்தையிலேயே தனது கேட்கும் திறனை இழந்துவிட்டார். ஆனால் அதை அவர் ஒரு குறைய நினைக்கவில்லை.
அதை முறியடிக்க பல்வேறு தகவல்தொடர்பு முறைகளை அவர் கற்று தேர்ச்சி பெற்றார். அது மட்டும் இல்லாமல் பேசுவதை உணர்ந்து கொள்ளும் லிப் ரீடிங் கலையையும் கற்றார் . உண்மையில், அவரது காது கேளாத தன்மையை ஒரு சொத்தாக எண்ணினார். நீல் ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக வேண்டும் என்ற கனவை அடைய உறுதிபூண்டார். மணிக்கட்டில் காயம் மற்றும் நோய்வாய்ப்பட்டதால் வாகனம் ஓட்டுவதற்கான அவரது காதல் ஒரு தடையை சந்தித்தது.
அனால் அவரது தேடல் வாட்டர் ஸ்கீயிங் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட சாகச அதிவேக விளையாட்டுகளை நோக்கி நகர்ந்தது. தீப்பற்றி எரியும் உயரமான இடங்களில் இருந்து பதற்றமில்லாமல் விழுவது, ஹெலிகாப்டர்களில் இருந்து குதிப்பது போன்ற ஆபத்தான செயல்களையும் செய்தார்.
அவர் 1970 களில் பெரிய திரைகளுக்கான ஸ்டண்ட் டபுளாக வாழ்க்கையைத் தொடங்கினார். தி பயோனிக் வுமன் (1976), வொண்டர் வுமன் (1977-1979) ஆகியவற்றில் இடம்பெற்று ஹாலிவுட்டின் சிறந்த ஸ்டண்ட் கலைஞர்களுக்கான ஸ்டண்ட்ஸ் அன்லிமிடெட் நிறுவனத்தில் சேர்ந்த முதல் பெண்மணியாக நீல் மாறினார்.
1976 ஆம் ஆண்டில், ஆல்வோர்ட் பாலைவனத் ராக்கெட் வேகத்தில் இயங்கும் காரை ஓட்டி அதற்கு முன்பு இருந்த அனைத்து அதிவேக வாகன ஓட்டுதல் சாதனைகளையும் உடைத்து நீல் 'உயிருள்ள அதிவேக பெண்' என்ற பட்டத்தை வென்றார். அப்போது அவர் மணிக்கு 512.76 மைல் வேகத்தில் வண்டியை ஊட்டினார். அதற்கு முன்பு 200 மைல் வேகம் தான் சாதனையாக இருந்தது.
அவர் செய்த சாதனை பெண்கள் பிரிவை மட்டும் அல்லது ஆண்களின் சாதனையையும் முறியடிக்கும் வேகம் கொண்டது. ஆனால் அவளது .ஸ்பான்சர்கள் அவளை போட்டியிட அனுமதிக்காததால் ஆண்களை முறியடிக்க முடியவில்லை. இதற்காக சட்டப்பூர்வமாக எதிர்க்கு போராடினார். ஆனால் அதிஷ்டம் அவள் பக்கம் இல்லை. இருப்பினும், ஜெட்-இயங்கும் படகுகள் மற்றும் ராக்கெட் டிராக்ஸ்டர்களை இயக்கி சாதனைகளை முறியடிப்பதில் இருந்து எந்த தடையும் அவளைத் தடுக்கவில்லை
இதையும் பாருங்க: வந்தே பாரத் ரயில் ஒட்டிய இந்தியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ்
சைலண்ட் விக்டரி: தி கிட்டி ஓ'நீல் ஸ்டோரி என்ற தலைப்பில் ஓ'நீலின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சுயசரிதை , 1979 இல் வெளியிடப்பட்டது. 2018 ல் இந்த உலகை விட்டு நீங்கினாலும் அவரது துடிப்பும் முயற்சியும் இன்றைய சமூகத்திற்கு ஒரு உத்வேகத்தை அளித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google Doodle, Women achievers