முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / VIDEO: மேஜிக் ஷோவை சொதப்பிய தம்பி... கோபத்தில் அக்கா செய்த செயல்.. வைரல் வீடியோ!

VIDEO: மேஜிக் ஷோவை சொதப்பிய தம்பி... கோபத்தில் அக்கா செய்த செயல்.. வைரல் வீடியோ!

சிறுமியின் மேஜிக்

சிறுமியின் மேஜிக்

குழந்தைகள் செய்த இந்த மேஜிக் வீடியோ ட்விட்டரில் 32 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைகள் தங்கள் உள்ளத்திற்கு உண்மையானவர்கள். அவர்கள் எதைச் செய்தாலும், இதயத்திலிருந்து செய்கிறார்கள். குழந்தைகள் தங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் முயற்சிக்க விரும்புகிறார்கள். மேலும் அவர்கள் அதை செய்யும் விதம் அவர்களின் படைப்பாற்றலையும் புரிதலையும் காட்டுகிறது.

குழந்தை பருவத்தில் குழந்தைகள் செய்யும் வேலைகள் அவர்களின் பொழுதுபோக்கு மற்றும் ஆர்வங்களை வெளிப்படுத்துகின்றன. பெரிய மாயாஜால நிகழ்ச்சிகளில் காட்டப்படும் மேஜிக் தந்திரம் போன்று சிறுமி ஒருவர் முயற்சித்துள்ளார். ஆனால் அதில் ஒரு தவறு உள்ளது, அதைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள்.

ஒரு அழகான சிறுமி தனது தம்பியுடன் ஒரு மந்திர தந்திரத்தைக் காட்டுகிறார். அற்புதமாக மேஜிக் காட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தாள். ஆனால் தம்பியின் ஒரு தவறால், அனைத்து ரகசியங்களும் வெளிவந்தன. பின்னர் கோபமான சிறுமி, சிறுவனை உதைத்து தள்ளியது தான் வீடியோவின் ஹைலைட்டே. இந்த வீடியோ ட்விட்டரில் 32 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது வழக்கமான ரீல்ஸுக்கான ஸ்கிர்ப்டேட் வீடியோதான் என்றாலும் குழந்தைகளின் நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது

அதன்படி, சிறுமியின் இந்த மேஜிக் வீடியோ வைரலாகி வருகிறது. இதில் நீங்கள் அடிக்கடி மேஜிக் ஷோக்களில் பார்த்த அதே மேஜிக்கை பார்ப்பீர்கள். தனது சகோதரனை டவலின் பின்னால் மறைய வைக்க முயற்சித்துள்ளார் சிறுமி. முதலில் அவள் நேராக நிற்கும் சகோதரன் முன் டவலை அசைக்க ஆரம்பிக்கிறாள், அந்த நேரத்தில் குழந்தை கதவுக்கு அருகில் ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. சிறுமி டவலை அகற்றியதும் சகோதரனைக் காணவில்லை. அவள் மகிழ்ச்சியடைவதற்குள் ஒளிந்துக் கொள்ள வேண்டிய தம்பியின் பின்பகுதி நமக்கு தெரிகிறது. இதனால் தனது மேஜிக் சொதப்பியதை உணர்ந்த சிறுமி, அவனை உதைத்து உள்ளே தள்ளுகிறாள்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: