ஐரோப்பிய நாடான ஸ்வீடன் பாலியல் உறவை விளையாட்டாக (Sex Championship) அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் அதுபற்றி ஸ்வீடன் அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்று இதுபோன்ற போட்டி ஸ்வீடனில் நடைபெறவுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. அதிலும் இந்த போட்டி தொடர்பான மற்ற தகவல்களிலும் கூறப்பட்டுள்ளதாவது-, ‘உலகில் முதன்முறையாக ஸ்வீடன் நாடு செக்ஸ் போட்டியை நடத்த அங்கீகரித்துள்ளது. ஜூன் 8 ஆம் தேதி இந்த போட்டி ஆரம்பம் ஆகி தொடர்ந்து 6 வாரங்களுக்கு நடைபெறும். ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரேஷனின் வழிகாட்டுதலின்படி இந்த போட்டி நடத்தப்படும். செடக்ஷன், ஓரல் செக்ஸ், பெனட்ரேஷன், எண்டூரன்ஸ், பாடி மசாஜ், ஃபோர் ப்ளே உள்ளிட்ட 16 அம்சங்கள் இதில் இடம்பெற வேண்டும்.
ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு போட்டியும் 45 முதல் 60 நிமிடங்கள் நீடிக்கும். 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்பார்கள். வெற்றியாளர்களை 3 பேர் கொண்ட குழு முடிவு செய்யும். பார்வையாளர்களும் வெற்றியாளர்களை தீர்மானிப்பார்கள். காமசூத்ரா போன்ற புராதன கலைகளை பயன்படுத்தும் ஜோடிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். செக்ஸ் சாம்பியன்ஷிப்பானது மற்ற விளையாட்டுக்களைப் போன்ற ஒன்றாகும். இதில் வெற்றி பெற பாலியல் கலையில் பயிற்சிகள் அவசியம். என்று கூறப்பட்டிருந்தது.
இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , இதுபோன்ற போட்டி நடப்பது உண்மைதானா என்பது பற்றி தற்போது விபரங்கள் வெளிவந்துள்ளன. ஸ்வீடனில் விளையாட்டு போட்டிகளுக்கு ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பு அனுமதி வழங்கி வருகிறது. நாட்டின் விளையாட்டு மேம்பாட்டிற்கு இந்த அமைப்பு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. செக்ஸ் போட்டி நடத்தவுள்ளதாக கூறப்படும் ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரேஷன் அமைப்பு, செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்துவதற்காக ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பை கடந்த ஏப்ரல் மாதம் அணுகியுள்ளது.
அப்போது விதி மீறல்கள் இருப்பதாக கூறி, கோரிக்கையை விளையாட்டு கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. மேலும், செக்ஸ் ஃபெடரேஷன் தங்கள் அமைப்பில் உறுப்பினர் இல்லை என்றும் ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்த செக்ஸ் சாம்பியன்ஷிப் குறித்த தகவல்கள் ஆதாரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending