முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / படத்தில் இருக்கும் 3 வித்தியாசங்களை 90 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடிதான்..!

படத்தில் இருக்கும் 3 வித்தியாசங்களை 90 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடிதான்..!

வித்தியாசங்களைக் கண்டுபிடிங்க

வித்தியாசங்களைக் கண்டுபிடிங்க

இரண்டு படங்களையும் பொதுவாக பார்க்கும்போது ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் உற்று நோக்கும் போதுதான் வித்தியாசங்கள் கிடைக்கும்..

  • Last Updated :
  • Chennai |

ஆப்டிகல் மாயை படங்கள் கண்களையும் மனதையும் ஏமாற்ற வேலை செய்கின்றன. இந்த முறை ஜப்பானிய பிக்சர்ஸ் புதிர் என்ற யூடியூப் சேனலில் இரண்டு ஒத்த படங்கள் பகிரப்பட்டன. இதில் மூன்று வித்தியாசங்களை 90 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். 1 நிமிடத்திற்கு மேல் எடுத்தாலும் சவாலை தீர்ப்பது எளிதல்ல என்று கூறியுள்ளது. அதை நாம் முயற்சி செய்துவிடுவோம்...

இன்று குழந்தைகள் இதழ் முதல் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்கள் வரை அனைத்திலும் இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க என்பது போன்ற படங்கள் இருப்பதைக் காணலாம். அப்படியான ஒரு எளிய படத்தைத் தான் அவர்களும் போட்டுள்ளார்கள்...

குழந்தைகளின் படங்கள் அடங்கிய மூளை பயிற்சிக்காக வழங்கப்படும் இந்த இரண்டு ஒத்தப் படங்களில் 3 வேறுபாடுகளைக் கண்டறியவும் . பொதுவாக பார்க்கும்போது இரண்டு படங்களும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் நுணுக்கமாக பார்க்கும்போது தான் அதில் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டறிய முடியும்.

படத்தில், இரண்டு குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் கண்ணாமூச்சி விளையாடுவதைக் காணலாம். ஒரு பெண் குழந்தையின் கண்களை இரண்டு கைகளாலும் மூடியுள்ளார். இருவரும் வேடிக்கையான மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த படத்தில் நீங்கள் 3 வேறுபாடுகளைக் கண்டறிய வேண்டும். விதியாசங்களைக் கண்டறிய  மொத்தம் 90 வினாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அது உங்களுக்கு அதிகம் தான் என்று எங்களுக்கு தெரியும். அதற்குள் டக்கு டக்கு என்று கண்டுபிடித்து விடுவீர்கள். இந்நேரம் விடையைக் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். சரி இந்த புதிருக்கான விடை என்னவென்று பார்த்து விடலாமா?  மூன்றும் எளிமையான வித்தியாசங்கள் தான்.

கழுகு கண்களை படத்தின் மேல் பாயவிட்டு பார்த்தால் இந்த வித்தியாசங்கள் நிச்சயம் உங்கள் கண்களுக்கு தென்படும். முதல் வித்தியாசம் சிறுவனின் கண்களை மூடி இருக்கும் சிறுமியின் இடதுகை விரல்கள். முதல் படத்தில் விரிந்திருக்கும் சுண்டு விரல், இரண்டாவது படத்தில் சேர்ந்து இருக்கும்.

இரண்டாவதுதாக, சிறுவனின் பாக்கெட்டில் வித்தியாசத்தை பார்க்க முடியும். முதல் படத்தில் பெரிதாக இருக்கும் பாக்கெட் இரண்டாவது படத்தில் சிறியதாக இருக்கும். பொதுவாக பார்க்கும் பொது பாக்கெட் என்று விட்டு விடுவோம். ஆனால் அதன் அளவின் வித்தியாசத்தைக் காட்டியுள்ளது.

இது தவிர, இன்னும் மூன்றாவதாக இருப்பதைக் கண்டுபிடிக்க ரொம்ப நுணுக்கமாக படத்தைப் பார்க்க வேண்டும்.  சிறுமியின்  காலணிகளில் அது ஒளிந்திருக்கும். இந்த மூன்றையும் நீங்கள் கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் தான் கில்லாடி. வாழ்த்துகள். இல்லை என்றாலும் பிரச்னை இல்லை.. பழகிக்கொள்ளலாம்.

First published:

Tags: Trending