பலரது பேவரட் ஃபாஸ்ட் ஃபுட் ஆக இருப்பது சாண்ட்விச். பொதுவாக ஒரு சாண்ட்விச், அதில் உள்ள ஸ்டஃபிங்கைப் பொறுத்து 100 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படும். சிறிய கடைகள் அல்லது தள்ளுவண்டிகளில் 100 ரூபாய்குள்ளாகவே சாண்ட்விச் வாங்கலாம்.
சாண்ட்விச்சை ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் சென்று சாப்பிடும் பொழுது அதற்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும். ஆனால் நியூயார்க்கிலுள்ள 'Serendipity 3' என்ற ரெஸ்டாரன்ட் பலரையும் கவரும் விதமாக ஒரு சாண்ட்விச்சை 214 டாலருக்கு விற்பனை செய்கிறது. இது இந்திய மதிப்புப்படி, 17 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். உலகின் மிகவும் விலை உயர்ந்த சாண்ட்விச்சை விற்பனை செய்த கின்னஸ் உலக சாதனையை 2014-ஆம் ஆண்டு முதல் Serendipity 3 ரெஸ்டாரண்ட் கொண்டுள்ளது.இந்த சாண்ட்விச் தற்போது அந்த ரெஸ்டாரன்ட் மெனுவில் இல்லை.
சமீபத்தில் மீண்டும் அந்த சாண்விட்சை விற்பனை செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் Serendipity 3 தகவல் வெளியிட்டது. "கின்னஸ் உலக சாதனை வென்ற எங்களது பெருமைக்குரிய டிஷ்ஷை மீண்டும் கொண்டு வருவதில் பெருமை அடைகிறோம். தேசிய கிரில்டு சீஸ் தினமான (ஏப்ரல் 12) இன்று, உலகிலேயே விலையுர்ந்த சாண்ட்விச் என்ற கின்னஸ் சாதனைப் பெற்ற 'The Quintessential Grilled Cheese Sandwich,’ - ஐ மீண்டும் அறிமுகப்படுத்துகிறோம். " என்று அவர்கள் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருந்தது.
Read More : இரண்டாம் உலகப் போருக்கும் ரவா இட்லிக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரியுமா..?
இந்த சாண்ட்விச் விலை உயர்ந்ததாக இருக்க என்ன காரணம்?
இந்த சாண்ட்விச்சை நீங்கள் நினைக்கும்போது சட்டென்று ரெஸ்டாரண்ட் சென்று வாங்க முடியாது. அதற்கு நீங்கள் 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே ப்ரீ ஆர்டர் செய்ய வேண்டும். டாம் பெரிக்னான் சாம்பேனால் செய்யப்பட்ட பிரெஞ்சு புல்மான் சாம்பேன் பிரெட்டின் இரண்டு துண்டுகளில் உண்ணக்கூடிய 23 கேரட் கோல்டு பிளேக்குகள் கொண்டு இந்த சாண்ட்விச் பேக் செய்யப்படுகிறது.
View this post on Instagram
முதலில் பிரெட் முழுவதும் டிரஃபிள் பட்டர் தடவப்படுகிறது. அதன் மீது வொயிட் டிரஃபிள் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. அதோடு ஒரு பவுண்ட் 50 டாலருக்கு விற்பனை செய்யப்படும் மிகவும் அரிதான கசியோகவாலோ போடோலிகோ சீஸ் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சீஸ் குறிப்பாக மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் 25,000 மாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இதுவே இதன் அதிகப்படியான விலைக்கு காரணம்.
சாண்ட்விச் பரிமாற தயாரானதும் அது இரண்டாக வெட்டப்படுகிறது. ஒவ்வொரு துண்டிலும் உண்ணக்கூடிய கோல்டு ஃபிளேக் வைக்கப்படுகிறது. உலகின் மிக விலையுர்ந்த ஃபிரன்ச் ஃப்ரைஸ் மற்றும் மில்க்ஷேக் விற்பனை செய்து உலக கின்னஸ் சாதனை படைத்த பெருமையும் 'Serendipity 3' ரெஸ்டாரன்டையே சேரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.