இணைய உலகம் வேகமாக வளரத் தொடங்கியதில் யாருக்கு லாபமோ இல்லையோ… யூடியூபர்களுக்கு லாபம் தான். ஆம் ஒரு மாதத்திற்கு சில லட்சங்கள் தொடங்கி பல கோடிகள் வரை சம்பாதிக்கும் யூடியூபர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக யூட்யூபர்களுக்கு பேரும் புகழும் கிடைத்து வருகிறது. அப்படி லைக்குகளை அள்ளி, பெயரையும் புகழையும் பெறுவதற்காக எத்தனையோ ரிஸ்குகளை எடுத்து வருகிறார்கள் யூடியூபர்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. ஆம், தனது யூடியூபில் லைக்குகளை அள்ளுவதற்காக விலை உயர்ந்த தனது சொகுசு காரை பெண் சர்வர் ஒருவருக்கு டிப்சாக கொடுத்திருக்கிறார் ஜிம்மி டோனல்ட்சன்.
மிஸ்டர் பீஸ்ட் எனும் யூட்யூப் சேனலைச் சேர்ந்த ஜிம்மி டோனால்ட்சன் அண்மையில் ஓர் உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றிருக்கின்றார். அங்கு தனக்கு உணவு பரிமாற வந்த பணிப் பெண்ணிடம், இதுவரை நீங்கள் வாங்கிய உச்சபட்ச டிப்ஸ் தொகையின் மதிப்பு எவ்வளவு எனக் கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த பெண் 50 டாலர்கள் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, "யாராவது உங்களுக்குக் காரை டிப்ஸாக தந்திருக்கின்றார்களா?, இந்தாங்க நான் தருகிறேன்", என கூறி தன்னுடைய விலை உயர்ந்த ஆடம்பர காரின் சாவியை இளம் பெண்ணிடம் வழங்கினார்.
இதைச் சற்றும் எதிர்பார்த்திராத அந்த பெண், சில நிமிடங்கள் அப்படியே அசையாமல் நிற்பதையும், ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வதையும் நம்மால் காண முடிகின்றது. இந்த திடீர் ஜாக்பாட்டால் திக்குமுக்காடிப் போன் ஆமி என்ற அந்த பெண் சர்வர், தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்றும் ஆனால் இப்பவும் இதை நம்பமுடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
Also Read : Math riddle| அரசு பணித் தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு ஏற்ற கணக்கு புதிர் இதோ!
இது தொடர்பான 29 விநாடி ஓடும் வீடியோவை தனது டிக் டாக்-கில் ஜிம்மி டொனால்ட்சன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. யூட்யூபரின் இந்த செயல் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே செய்யப்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். காரின் முன் பக்க பானெட் மற்றும் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் தன்னுடைய நிறுவனத்தின் லோகோக்களை ஜிம்மி பயன்படுத்தி இருப்பதாகவும் மூலம் அவர் விளம்பரம் தேடி நினைப்பதாகவும் கருத்து கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு யூடியூபர் ஒருவர் தான் தயாரிக்கும் ஒரு எனர்ஜி ட்ரிங்கை விளம்பரப்படுத்துவதற்காகப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது லாம்போர்கினி காரை நொறுக்கும் வீடியோ வைரலானது. அதே போல் தான் இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Influencer, Trending News