முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பேஸ்புக் ஓனர் மார்க்கா இது? பேஷன் ஷோவில் கலந்துகொண்டாரா? உண்மை இதுதான்!

பேஸ்புக் ஓனர் மார்க்கா இது? பேஷன் ஷோவில் கலந்துகொண்டாரா? உண்மை இதுதான்!

வைரலாகும் மார்க் புகைப்படங்கள்

வைரலாகும் மார்க் புகைப்படங்கள்

லூயிஸ் வியூட்டன் பிராண்ட் ஆடைகளை அணிந்து பேஷன் மாடலாக மார்க் சக்கர்பெர்க் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashington

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் பேஷன் ஷோ நிகழ்வில் ரேம்ப் வாக் மாடலாக வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி ஆடை பிராண்டான லூயிஸ் வியூட்டன் (Louis Vuitton) உடைகளை அணிந்து அவர் அந்த புகைப்படங்களில் தோற்றம் அளிக்கிறார்.

இந்த புகைப்படங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும் சற்று திகைப்பையும் ஏற்படுத்தியது. காரணம், பொதுவாகவே மார்க் ஆடை, அலங்காரம், பேஷன் போன்றவற்றில் ஒருபோதும் நாட்டம் இல்லாதவர். மிக எளிமையாக நீல டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேன்ட் மட்டும் தான் இவர் அணிந்திருப்பார். அப்படி இருக்க மார்க் ஒரு மாடல் கெட் அப்பில் ரேம்ப் வாக் செய்தது உண்மை தானா என்று ஆச்சரியப்பட்டனர். ஆனால், அவர்களின் சந்தேகத்தை மெய்பிக்கும் விதமாக அது உண்மை அல்ல என்று உறுதி செய்யப்பட்டது.

மார்க் சக்கர்பெர்க்கின் அந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை புகைப்படங்கள். இவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட தத்ரூபமாகவே இருக்கும். சமீப காலங்களாகவே இது போன்ற AI புகைப்படங்கள் இணைய உலகில் டிரெண்டாகி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு காந்தி, அம்பேத்கர், அன்னை தெரசா போன்ற மறைந்த தலைவர்கள் செல்பி எடுத்தால் எப்படி இருக்கும் என்ற வகையில் அவர்களின் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

அதேபோல, பிரபல வெப் சீரீஸ் ஆன கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதாபாத்திரங்கள் இந்திய அரசர்கள் போன்ற தோற்றத்தை கொண்ட செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களும் இணையத்தை கலக்கி வருகிறது.

top videos
    First published:

    Tags: Artificial Intelligence, Facebook, Mark zuckerberg, Viral News